May 17, 2017 தண்டோரா குழு
சுமோ மல்யுத்த வீரர்களில் கையில் குழந்தைகள் அழுதால், நல்ல உடல் சுகத்துடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை கொண்ட விழா ஒன்று ஜப்பானின் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சுமோ மல்யுத்த வீரர்கள் களத்தில் இறங்கும்போது, எதிரியை தரையில் வீழ்த்துவதே அவர்களுடைய முக்கிய நோக்கம். ஆனால், ஞாயிற்றுக்கிழமை(மே 14) நடந்த விழாவில், அதே விளையாட்டு வீரர்களின் நோக்கம் வேறாக இருந்தது – குழந்தைகளை அழ வைப்பது தான் அந்த நோக்கம்.
ஜப்பான் நாட்டின் சங்கமிஹரா என்னும் இடத்தில் கமேகைகே ஹசிமங்கு கோவில் உள்ளது. அந்த கோவிலில் ‘அழுகும் சுமோ வளையம்’ என்னும் இடம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளில் அழ வைக்கும் விழா அங்கு நடைபெற்று வருகிறது.
இந்த விழா சுமார் 400 முன் தொடங்கப்பட்டது. தங்கள் குழந்தைகளை நல்ல ஆரோக்கியத்துடன் வளர சுமோ மல்யுத்த வீரர்கள் உதவுவார்கள் என்பது ஜப்பானிய பெற்றோர்கள் நம்பிக்கை.
அந்நாளில் சுமோ விளையாட்டு வீரர்கள் குழந்தைகளை தூக்கும்போது, எந்த குழந்தை அதிகமாக அழுகிறதோ, அதுவே வெற்றியாளர் என்று கருதப்படுகிறது. இந்த விழாவில் இரண்டு வயதிற்கு கீழுள்ள சுமார் 15௦ குழந்தைகள் சுமோ மல்யுத்த உடைகளை அணிந்து அழகுடன் பங்கேற்றனர்.
சுமோ மல்யுத்த வீரர்கள் குழந்தைகளை தூக்கி, கொஞ்சி மகிழ்ந்தனர். பெற்றோரிடமிருந்து குழந்தையை பிரித்தது முதல், குழந்தைகள் அழ தொடங்கினர். குழந்தையை வெற்றி பெற செய்ய, அவர்கள் அதை இன்னும் அதிகமாக அழ செய்தனர். அந்த விளையாட்டின் நடுவர், முகமூடி அணிந்து, வேடிக்கையான முக பாவனைகளை காண்பித்து, குழந்தைகளை அழ செய்தார்.
பார்பவர்களுக்கு அது கொடுமையாக இருந்தாலும், அப்படி செய்வது மூலம் அந்த குழந்தைகளை எல்லா தீய சக்திகளில் இருந்து பாதுகாக்கும் என்றும் நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும் என்ற நம்பப்படுகிறது.
“குழந்தைகளில் அழுகை சத்தம் பேய்களை விரட்டும் என்றும் அவர்களை எல்லா பிரச்சனைகளிலிருந்து அவர்களை காத்துக்கொள்ளும் என்று நம்பப்படுகிறது” என்று ஹிரோயுகி நெகிஷி கூறினார்.