August 15, 2017 தண்டோரா குழு
அமெரிக்காவில் தன் வீட்டின் அருகிலுள்ள குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக நீச்சல் குளம் ஒன்றை கட்டி தந்த முன்னாலள் நீதிபதியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
அமெரிக்காவின் மின்னிசொட்டா மாநிலத்தின் மோரிஸ் நகரில் 94 வயது முன்னாள் நீதிபதி கெய்த் டேவிசன், தன்னுடைய மனைவியுடன் சுமார் 66 ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவருடைய மனைவி 2016ம் ஆண்டு, புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.
மனைவின் இறப்பால் துக்கத்திலும் தனிமையிலும் இருந்தார். ஆனால், எத்தனை நாட்கள், மனைவியின் மறைவுக் குறித்து நினைத்து கொண்டிருப்பது என்று எண்ணினார். உடனே வீட்டின் பின்புறத்தில் 32 அடி நீளமும் 9 அடி ஆழமும் கொண்ட நீச்சல் குளம் ஒன்றைக் கட்டினார். கடந்த ஜூலை மாதத்தில் அதை, அவருடைய வீட்டின் அருகில் இருந்த சிறுவர் சிறுமிகள் நீந்தி விளையாட திறந்து வைத்தார்.
அந்த நீச்சல் குளத்தை திறந்த பிறகு, அவருடைய வீட்டின் அருகில் வசிப்பவர்கள் மற்றும் அவர்களுடைய குழந்தைகள், தினமும் வந்து அதில் நீந்தி விளையாடுவார்கள்.
“அவரின் இந்த முயற்சியால், குழந்தைகளுக்கு மட்டும் மகிழ்ச்சி தராமல், அந்த பகுதியில் வசிக்கும் அனைவருக்கு மகிழ்ச்சியை தருகிறார். நீச்சல் குளத்தில் வந்து விளையாடும் குழந்தைகள் அவருக்கு பேர குழந்தைகள் போல் இருக்கிறார்கள். குழந்தைகள் வீட்டிற்கு சென்ற பிறகு, கெய்த் சிறிது நேரம், அந்த நீச்சல் குளத்தில் நீராடி மகிழ்வார்” என்று அவருடைய அண்டை வீட்டார் தெரிவித்தனர்.