June 12, 2017 தண்டோரா குழு
குழந்தை தொழில்முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
தேசித குழந்தை தொழிலாளர் திட்டத்தின், மாவட்ட தொழிலாளர் துறை சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 14 வயதிற்கு கீழ் குழந்தைகளை எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்தமாட்டேன், 18 வயதிற்கு கீழ் உள்ள வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்தமாட்டேன் என்ற வாசகங்கள் எழுதி வைக்கப்பட்டுள்ள பலகை வைக்கப்பட்டிருந்தது.
அதில் கையெழுத்திட மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். குழந்தை தொழிலாளர் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாள் முழுவதும் வைக்கப்பட்டுள்ள இந்த பலகையில் யார் வேண்டுமானாலும் கையெழுத்து இடலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும் மாவட்டம் முழுவதும் முக்கிய பகுதிகளில் குழந்தை தொழிலாளர் முறை, அதை ஒழிப்பது அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.