January 21, 2023
தண்டோரா குழு
தந்தை பெரியார் திரவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணனின் மறைந்த மனைவி வசந்தியின் உடலுக்கு பேரறிவாளன், அற்புதம்மாள், ஆ.ராசா எம்பி – அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட பலர் மலரஞ்சலி செலுத்தினர்.
தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு. ராமகிருஷ்ணனின் மனைவி,மறைந்த வசந்தி உடல் நலக்குறைவால் நேற்று இறந்தார்.திமுக துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்பி, தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் Ex Mla, வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி ஆகியோர் இன்று மலரஞ்சலி செலுத்தினர்.
மேலும், மாநகராட்சி மேயர் கல்பனா, துணைமேயர் வெற்றிச்செல்வன், பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கொளத்தூர் மணி, பேரறிவாளன், அற்புதமாள் ஆகியோருன் மலரஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, காந்திபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம், மறைந்த வசந்தியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள மின் மயானத்தில் உடல் தகனம் நடைபெற்றது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.