February 14, 2017
தண்டோராகுழு
அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள கூவத்தூர் பகுதிகளில் அசாதாரண சூழல் நிலவுவதால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேர் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதைத் தொடர்ந்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூவத்தூர் வர இருப்பதாகத் தகவல்கள் வெளியாயின. இதனால், கூவத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கூவத்தூர் பகுதிகளில் அசாதாரண சூழல் நிலவுவதால் கல்பாக்கம் முதல் கூவத்தூர் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி அறிவித்துள்ளார்.
இதனால், கூவத்தூர் வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.