February 18, 2017
தண்டோரா குழு
பராமரிப்பு காரணமாக கூவத்தூர் தனியார் சொகுசு விடுதி 2 நாட்கள் மூடப்பட்டாதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
அ.தி.மு.க ஓ.பி.எஸ் அணி, சசிகலா அணி இரண்டாக பிரிந்தது. இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அதிமுக எம்எல்ஏக்களை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூவத்தூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் கடந்த 10 நாட்களாக தங்க வைக்கப்பட்டனர். அதிமுக பொதுசெயலாளர் சசிகலாவும் இங்கு தான் இரண்டு நாட்கள் தங்கியிருந்தார்.
தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடந்து வரும் அரசியல் அசாதாரண சூழலில் அதிகம் கவனிக்கப்பட்டது கூவத்தூர் ரிசார்ட் தான். இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு காரணமாக அதிமுக எம்எல்ஏகள் இன்று அங்கிருந்து வெளியேறினர். இதையடுத்து, அங்கு பராமரிப்பு காரணமாக ரிசார்ட் மூடப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.