• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கென்யாவில் பிளாஸ்டிக் பைகள் விற்க தடை

August 28, 2017 தண்டோரா குழு

கென்யாவில் பிளாஸ்டிக் பைகளை விற்றாலோ, உற்பத்தி செய்தலோ சுமார் இந்திய மதிப்புப்படி 12 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கு பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி செய்வதை தடுத்தால், பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்று பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

சுற்றுசூழலுக்கு இணக்கமாக இருக்கும் பொருட்களை பயன்படுத்தி பைகளை தயாரித்தால், பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழியுண்டு என்று அந்த நாட்டின் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

“கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியிலிருக்கும் வீதிகளில் பிளாஸ்டிக் ஷாப்பிங் பைகள் சிதறி கிடக்கின்றன. குப்பைகளை கொட்டும் இடத்தில் பிளாஸ்டிக் பைகள் மலைப்போல் குவிந்து கிடக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் சூப்பர்மார்க்கெட்டில், 1௦௦ மில்லியன் பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் தரப்படுகின்றன. பிளாஸ்டிக் பைகள் சுற்றுசூழலை அதிகம் பாதிக்கிறது. அதோடு கால்வாய்களில் பிளாஸ்டிக் பைகள் அடைத்து விடுகின்றன, அவைகளை எளிதில் அழிக்கவும் முடிவதில்லை” என்று கென்யா சுற்றுசூழல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கேமரூன், கினியா பிஸ்ஸாவ், மாலி, தான்சானியா, உகண்டா, எதியோப்பியா, மௌரிடானியா மற்றும் மலாவி ஆகிய ஆப்ரிக்க நாடுகள் பிளாஸ்டிக் பைகளுக்கு தடைவிதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க