• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கெயில் எரிவாயு குழாய் அமைக்க தமிழக அரசு அனுமதிக்காது

January 16, 2017 தண்டோரா குழு

விவசாய பட்டா நிலங்களில் கெயில் எரிவாயு குழாய் அமைக்க தமிழக அரசு அனுமதிக்காது என அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர்.

விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் திங்கட்கிழமை நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட கெயில் எரிவாய்வு குழாய் திட்டத்தால் பாதிக்கப்படக் கூடிய ஏழு மாவட்டங்களையும் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, எடப்பாடி பழனிச்சாமி, கருப்பண்ணன், தங்கமணி, அன்பழகன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், “மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தது போல் விவசாய பட்டா நிலங்களில் கெயில் எரிவாய்வு குழாய் அமைக்க தமிழக அரசு அனுமதிக்காது என அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர்.

இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணமாக உள்ள பெட்ரோலியம், மினரல் பைப் லைன் சட்டத்தையும் திரும்பப் பெற வலியுறுத்தி, கூட்டத்தில் அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வைப்பதே விவசாயிகளின் முக்கிய குறிக்கோள் இதற்காக வரும்காலங்களில் கடுமையான போராட்டங்களில் ஈடுபடவுள்ளோம்” என்று தெரிவித்தனர்.

மேலும் படிக்க