November 13, 2021 தண்டோரா குழு
உலகின் எந்த மூலையில் இருந்தும் இந்திய பாரம்பரிய கலைகளை கற்றுக்கொள்ளும் விதமாக கோவையை சேர்ந்த பள்ளி மாணவி சம்யுக்தா கலை தொடர்பான மொபைல் செயலியை உருவாக்கி அசத்தியுள்ளார்.
கோவை கணபதி மணியகாரம்பாளையம் பகுதியை சேர்ந்த சந்திரபிரபா,ரமேஷ் பாபு தம்பதியினரின் மகள் சம்யுக்தா.அதே பகுதியில் உள்ள கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவி சம்யுக்தா சிறு வயது முதலே பரதம் மற்றும் பல்வேறு கலைகளை கற்று அதில் உலக சாதனைகள் பல புரிந்தும் உள்ளார்.
குறிப்பாக பரத கலையின் முத்திரைகளை குறைந்த நேரத்தில் அபிநயம் செய்து பல்வேறு உலக சாரனைகள் செய்த இவர்,தற்போது கலை உலகில் அனைத்து தரப்பினரும் ஆச்சரியப்படும் வகையில் யுக்தா எனும் புதிய மொபைல் செயலியை உருவாக்கி உள்ளார்.
நவீன மாற்றத்திற்கு தகுந்த படி அனைத்து தரப்பினரும் இந்திய பாரம்பரிய கலைகளை கற்றும் கொள்ளும் விதமாக மாணவி சம்யுக்தா உருவாக்கி உள்ள இந்த செயலியின் வாயிலாக நடனம் உள்ளிட்ட கலைகளை கற்றுக்கொள்வதோடு அது குறித்த அனைத்து விபரங்களையும் பெறுவதோடு, தங்கள் பகுதியில் நடக்கும் கலை தொடர்பான போட்டிகள் குறித்தும் இந்த செயலியின் வாயிலாக தெரிந்து கொள்ள முடியும் என மாணவி சம்யுக்தா தெரிவித்துள்ளார்.
கலை தொடர்பான யுக்தா செயலியை உருவாக்கிய பள்ளி மாணவி சம்யுக்தாவை பாராட்டி நோபள் உலக சாதனை புத்தகத்தின் பதிப்பாளர் தியாகு நாகராஜ் வாழ்த்து தெரிவித்தார்.