November 9, 2017 தண்டோரா குழு
கேரளாவில் பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தின் பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கும் ‘ஷீ பேட்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் வழங்கப்படும்.
முதல் கட்ட நடவடிக்கையாக, பெண்கள் அபிவிருத்தி நிறுவனம், இந்த திட்டத்தை சுமார் 300 பள்ளிகளில் செயல்படுத்தும். அதன்பிறகு, வரும் ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது.
இலவச நாப்கின்களை விநியோகிப்பது மட்டுமே இந்த திட்டத்தின் நோக்கம் அல்ல. மாதவிடாய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கமும் கொண்டது ‘ஷீ பேட்’ திட்டம். கேரளா மாநிலத்தின் 114 பஞ்சாயத்துகளிலுள்ள 300 பள்ளிகளில் இந்த திட்டம் இந்த ஆண்டில் செயல்படுத்தப்படும்.என்று கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்