June 30, 2017
தண்டோரா குழு
கேரளாவில் எம்எல்ஏவை, உதவி ஆட்சியர் ஒருவர் காதலித்து திருமணம் செய்துள்ளார்.
கேரள முன்னாள் சபாநாயகரின் மகனும், அருவிக்கரை தொகுதி எம்.எல்.ஏவுமான சபரிநாதனுக்கும், திருவனந்தபுரம் மாவட்ட உதவி மாவட்ட ஆட்சியர் திவ்யாவும் காதலித்து வந்தனர். இது சமூக வலைத்தளத்தில் பரவலாக பேசப்பட்டது.
இதையடுத்து, இருவீட்டார் சம்மந்தத்துடன் இன்று கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண நிகழ்ச்சியில், கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிலதா உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.