August 17, 2017
தண்டோரா குழு
கேரளாவில் விபத்தில் பலியான முருகனின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்ததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் உயிரிழந்த முருகனின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், காயமடைந்த முத்துவுக்கு 50 ஆயிரம் ரூபாயும், முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே முருகன் குடும்பத்தினருக்கு கேரள அரசு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.