May 25, 2017
தண்டோரா குழு
கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி முன்னணி ஆட்சி நடைப்பெற்று வருகின்றது. பினராயி விஜயன் தலைமையிலான அரசு ஒரு வருட ஆட்சியை நிறைவு செய்ததையொட்டி நடிகர் கமல்ஹாசன் இ-மெயில் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், “தங்கள் ஓராண்டில் மிகச்சிறந்த நல்லாட்சி வழங்கியுள்ளீர்கள். கேரள மக்களின் மகிழ்ச்சியில் நான் பங்கெடுத்துக் கொள்கிறேன்”.மேலும் மற்ற மாநில அரசுகளுக்கு முன்னோடியான மாநிலமாக கேரளாவை திகழச் செய்து வருகிறீர்கள். என்று தனது வாழ்த்து செய்தியில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.