April 11, 2017
தண்டோரா குழு
கேரள பள்ளிகளில் மலையாள மொழி கட்டாயம் கற்பிக்கப்படுவதற்கான அவசர சட்டத்திற்கு அம்மாநில ஆளுநர் சதாசிவம் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
கேரளாவில் உள்ள சில பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மலையாளம் கற்றுத்தராதது தொடர்பாக அரசுக்கு புகார்கள் வந்தன.இதனையடுத்து கேரள மாநிலத்தில் நடைப்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில்,தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் மலையாளம் கற்பிக்கப்படுவதை கட்டாயமாக்கி அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளார்.
மேலும் இதனை மீறும் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இந்த சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.