July 3, 2017 தண்டோரா குழு
சினமாவுக்கு விதிக்கப்பட்ட கேளிக்கை வரியை ரத்து செய்யவேண்டும் என்ற திரைத்துறையினரின் கோரிக்கை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தி தகுந்த முடிவு எடுக்கப்படும் என தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இதுக் குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் இதற்கு முன்னாள் நிரணயிக்கப்பட்ட வரி விகிதங்கள் அடிப்படையில்தான் தற்போது திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி வசூலிக்கப்படுகிறது.
சினிமாவுக்கு விதிக்கப்பட்ட கேளிக்கை வரியை ரத்து செய்யவேண்டும் என்ற திரைத்துறையினரின் கோரிக்கையானது தமிழக அரசின் கொள்கை ரீதியிலினான முடிவு எடுக்கப்பட வேண்டிய விவகாரம். எனவே, இது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் நலனை பாதிக்காத வகையில் தான் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு உள்ளது. உணவு விடுதிகளில் உணவுப் பொருட்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஜி.எஸ்.டி. வரியை தவறாக வசூலிப்பவர்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.” என்றார்.