December 6, 2022 தண்டோரா குழு
ப்ரீஸ்பேஸ், ஒரு தனியங்கி தனித்துவமிக்க தொழில்நுட்பம் சார்ந்த பணியிடம். 2015ம் ஆண்டில் துவங்கப்பட்ட ஒரு நேர்த்தியான அலுவலகம். பணிக்கான சிறந்த தீர்வுகளை தருவதோடு வணிகத்துக்காக மாபெரும் உதவியை வெற்றிகரமாக அளித்து வருகிறது.
கோவை, கீரணத்தமில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 7000 சதுரடியில் அமைந்துள்ளது.உற்பத்தி, ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் பயிற்சிக்கான முன்னோடி மையமாக செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தை இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளையின் தலைவர் பி.ஸ்ரீராமுலு துவக்கி வைத்தார்.
ஒருங்கிணைந்த மேலாண்மை அமைப்பு சார்ந்த ஒரு அலுவலகமாக, மாஸ்டர்கார்ட், ஏஎக்ஸ்ஏ, மற்றும் நாஸ்டாக் போன்றவை உலநாடுகளில் உள்ள நிறுவனங்கள் பயன்படுத்தி வரும் ஆற்றல் வாய்ந்த நேர்த்தியான அலுவலகமாக ப்ரீஸ்பேஸ் உள்ளது.
இதன் ஐஓடி சென்சார்கள், டிஜிட்டல் வழி காட்டுதல் குறியீடுகளுடன் இணைந்துள்ளது. இதன் மொபைல் செயலியானது, எளிதான அலுவலக அனுபவத்தை பணியாளர்களுக்கு தருகிறது.தானியங்கி கருவிகள், அலுவலகத்தை இயக்க உதவிகள், திறம்பட செயல்படவும், முடிவெடுப்போருக்கு அதிகபட்ச திட்டமிடலை பட்டியலிடவும் உதவுகிறது.
ப்ரீஸ்பேஸ் தீர்வுகள், பணியாற்றும் மக்களுக்கும், உலகுக்கும், லாபத்திற்கும் என, அதிநவீன வணிகத்தின் 3 நிலைகளுக்கும் மிகுந்த பயனளிக்கும்.
ப்ரீஸ்பேஸ் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிறுவனர் ராஜ் கிருஷ்ணமுர்த்தி பேசுகையில்,
இந்தியாவில், வணிகம் சார்ந்த ரியல் எஸ்டேட் உள்நாட்டிலும் வெளிநாட்டிலிருந்தும் வேகமான வளர்ச்சியை பெற்று வருகிறது. எனவே, தொழில்நுட்ப ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்தவும், அலுவலக தேவைகளை கண்டறியவும் புதிய வழிமுறைகள் மிகவும் அவசியமாகிறது.எங்களது மும்பை மேம்பாட்டு செயல்படுகளுடன் கோவையின் சிறப்பு மையம் இணைந்து, புதிய உள்நாட்டு சூழலில் வளர்ச்சிக்கான வலுவான விநியோகத்தொடரை உருவாக்குவோம்,” என்றார்.
ப்ரீஸ்பேஸ் முதலீடுகள் குறித்து இந்திய தொழில் வர்த்தக சபையின் கோவை கிளை தலைவர் ஸ்ரீ பி.ஸ்ரீராமுலு பேசுகையில், “
ப்ரீஸ்போஸ் போன்ற நிறுவனங்களின் வணிகத்தை கவரும் விதமாக கோவையின் வளர்ச்சி அமைந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு திட்டமிடலுக்கு கோவையின் தொழில் வளர்ச்சியும், இங்குள்ள பொறியியல் திறன்மிக்கவர்களும் பெரிதும் உதவி வருகின்றனர்.
ப்ரீஸ்பேஸ் போன்ற பல நிறுவனங்கள் கோவைக்கு வர வேண்டும். இது போன்ற நிறுவனங்கள் கோவையை தேர்வு செய்து தேசிய அளவில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், சேவைக்கும் உதவிட வேண்டும்.
வேகமான தொழில்நுட்ப வளர்ச்சியைக் கொண்டுள்ள இது போன்ற நிறுவனத்துவக்க விழாவில், பங்கேற்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.
ப்ரீஸ்பேஸ், உலகின் முன்னணி பணியிட வடிவமைப்பு நிறுவனங்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு இந்த அலுவலகத்தை அமைத்துள்ளது. இந்த பணியிடத்தின் சிறப்பு அம்சங்கள், சூரிய ஒளி உணர்திறன் கொண்ட கருவிகள், தரமான காற்றை மதிப்பிடும் கருவி, சிறப்பான பணியிட சூழல், ஆத்தங்குடி ஓடுகளில் வடிவமைக்கப்பட்ட வரவேற்பு, வயநாடு பர்னிச்சர்கள், 16 அடி உயர அழகிய கலைவேலைப்பாடுகள் கொண்ட சித்திரங்கள் போன்றவை இங்கு இடம் பெற்றுள்ளன.
டிஜிட்டல் வழி குறியீடுகள், தானியங்கி முறையில் விடுவிக்கும் இடங்கள், அலுவலக பணியாளர்கள் எண்ணிக்கை முறை, மேம்பாடுத்தப்பட்ட மொபைல் செயலியுடன் அனுபவங்கள், இடமேலாண்மை சாப்ட்வேர் வசதிகள் மற்றும் இடவசதியை திட்டமிடல் போன்றவைகளும் இங்குள்ளன.