September 23, 2021 தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில், உள்ளூர் மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, கருர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மருத்துவமனையின், தீவிர சிகிச்சை பிரிவு, பழைய முடநீக்கியல் பிரிவு மற்றும் மஹாவீர் பில்டிங் ஆகிய மூன்று வார்டுகளில் கொரோனா வார்டு செயல்பட்டு வருகிறது.
அதில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கென 120 சாதாரண படுக்கைகள், 372 ஆக்ஸிஜன் படுக்கைகள், 68 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் மற்றும் அட்டெண்டர்களை கண்காணிக்க, கொரோனா வார்டுகளில் 25 சி.சி.டி.வி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில்,
கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருபவர்கள் வெளியில் செல்வதை தடுக்கவும், வார்டுக்குள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.மேலும், மருத்துவர்களுடன் தகராறில் ஈடுபடுவது போன்ற செயல்களை கண்காணிக்கவும் இவை உதவும். ’’ என்றார்.