September 30, 2021 தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனை, சுற்றியுள்ள 5 மாவட்டங்களுக்கு மண்டல மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.அரசு மருத்துவமனைக்கு மாரடைப்புடன்,மேல் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனையின், இருதய துறையில் 24 மணி நேரத்தில் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கென, கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 31 அன்று, கேத் லேப் நிறுவப்பட்டது.அன்று முதல் நோயாளிகளுக்கு ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளில்,5 ஆயிரம் ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 3250 ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காலத்திலும் இச்சிகிச்சை தடையின்றி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. குறுகிய காலத்தில் இதனை சாத்தியமாக்கிய மருத்துவர்கள் குழுவினருக்கு மருத்துவமனை டீன் நிர்மலா பாராட்டு தெரிவித்துள்ளார்.