• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேருக்கு காவல் நீட்டிப்பு

November 24, 2022 தண்டோரா குழு

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேருக்கு காவல் நீட்டிக்கப்பட்டது.

கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் ஜமேஷா முபின் (29). பழைய துணி வியாபாரி.இவர் கடந்த மாதம் 23ம் தேதி காரில் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் முன் சென்று கொண்டிருந்தபோது கார் வெடித்தது. இதில் அதே இடத்தில் அவர் உடல் கருகி இருந்தார். காரில் 2 காஸ் சிலிண்டர்கள் இருந்தன. இதில் ஒரு சிலிண்டரில் காஸ் கசிந்து வெளியேறியிருந்தது.

கார் வெடித்த இடத்தில் இரும்பு ஆணிகள். கோலி குண்டுகள் சிதறி கிடந்தது.உக்கடம் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்தவர் வீட்டில் இருந்து வெடி பொருட்கள் தயாரிப்பதற்கான 75 கிலோ எடையிலான முக்கிய மூலப் பொருட்களான அமோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சல்பர் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய மூட்டையை தூக்கி சென்றதும், அதை காரில் வைத்ததும் தெரியவந்தது. இந்த வெடி பொருட்கள் வெடித்துதான் காரில் இருந்த ஜமேஷா முபின் இறந்து விட்டதாக தெரிகிறது.

ஜமேஷாவிற்கு உதவியாக இருந்த ஜி.எம் நகர் பகுதியை சேர்ந்த முகமது தல்கர் (25), முகமது அசாருதீன் (25), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (28), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (உபா) பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இவர்கள் 5 பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே உக்கடம் வின்சென்ட் ரோட்டை சேர்ந்த ஜமேஷா முபினின் உறவினரான அப்சர் கான் (28) என்பவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. எலக்ட்ரீசியனாக பணியாற்றி வரும் இவர் வீட்டில் இருந்த லேப்டாப், செல்போன், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் ஜமேஷா முபினிற்கு சட்ட விரோத செயல்களுக்கு உதவியதாக தெரியவந்தது.

இவர் மீது சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரையும் போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு உள்ளூர் போலீசாரிடமிருந்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் கடந்த 27ம் தேதி ஒப்படைக்கப்பட்டது. என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக பூந்தமல்லி நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கோவை சிறையில் இருந்த 6 பேரும், பூந்தமல்லி நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது சிறையில் உள்ள 6 பேருக்கும் வரும் டிசம்பர் 6ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டது.

மேலும் படிக்க