August 11, 2022
தண்டோரா குழு
கோவை தடாகம் சாலை கே.என்.ஜி புதூர் 15வது வார்டில் உள்ள நடுநிலை பள்ளியில் சுற்று சுவர் இல்லாமல் இருந்து. எனவே அப்பளிளிக்கு சுற்று சுவர் கட்டி தரவேண்டுமென நீண்ட நாட்களாக அப்பள்ளி மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் 15வது மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி தலைமையில் எம்பி நிதி உதவியில் தற்போது சுற்ரு சுவர் கட்டப்படுகிறது. இதற்கான பூஜை இன்று போடப்பட்டது. இதில் மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி, ஏ.இ குமரேசன் திமுக கண்ணன் உட்பட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நீண்ட நாட்கள் கோரிக்கை தற்போது நிறைவேற உள்ள பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.