• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கே.எம்.சி.எச் மருத்துவமனையில் புதிய அதிநவீன மருத்துவ கருவிகள் – அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைப்பு

January 31, 2022 தண்டோரா குழு

கோவை கே.எம்.சி.எச் மருத்துவக்கல்லூரி மற்றும் பொது மருத்துவமனையில் அதிநவீன கேத் லேப், எம்.ஆர்.ஐ மற்றும் சிடி ஸ்கேன் ஆகிய நவீன வகை மருத்துவ கருவிகளை தமிழக மின்சாரம் கலால் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் மேற்கு மண்டல பகுதியில் அதி நவீன மருத்துவ வசதிகள் கொண்ட முன்னனி மருத்துவமனையாக கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அண்மையில் புதிதாக துவங்கப்பட்ட கே.எம்.சி.எச். மருத்து கல்லூரி பொது மருத்துவமனையில் அதி நவீன கேத் லேப்,,எம்.ஆர்.ஐ. மற்றும் சி.டி.ஸ்கேன் கருவிகள் துவக்க விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

கே.எம்.சி.எச்.மருத்துவமனை தலைவர் நல்லா ஜி.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இதில் துணை தலைவர் டாக்டர் தவமணி பழனிசாமி,செயல் இயக்குனர் டாக்டர் அருண். என்.பழனிசாமி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தமிழக மின்சாரம் கலால் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு புதிய மருத்துவக் கருவிகளை துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி,

கரூர்,ஈரோடு,திருப்பூர்,நீலகிரி,கோவை, நாமக்கல் பல்வேறு மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டல பகுதி வாழ் மக்களுக்கு கே.எம்.சி.எச். பல்நோக்கு மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார். தொடர்ந்து அவர்,இந்தியாவிலேயே மருத்துவ துறையில் தலைநகராக தமிழகம் இருப்பதாகவும்,குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெறும் அளவிற்கு அதி நவீன மருத்துவ வசதிகள் கொண்ட மாவட்டமாக கோவை மாவட்டம் இருப்பதாக தெரிவித்தார்.

தமிழக முதல்வர் மக்கள் நல்வாழ்வு துறையின் வாயிலாக பல்வேறு மக்கள்வநலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், குறிப்பாக மக்களை தேடி மருத்துவம், வருமுன் காப்போம், இன்னுயிர் காப்போம் என பல்வேறு திட்டங்களை மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

துவக்க விழாவில் மருத்துவகல்லூரி மருத்துவமனை பல்வேறு நிலை நிர்வாகிகள், மருத்துவர்கள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க