May 29, 2022
தண்டோரா குழு
கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபா- தாராபுரம் இணைந்து 29.05.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மாபெரும் இலவச மருத்துவ முகாமை நடத்தியது.
இந்த முகாமை மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் Dr.A.N.முருகன் அவர்கள் துவக்கிவைத்தார்.இவருடன் தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபையின் மாநில கௌரவ தலைவர், ராஜா N.ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த முகாமை தமிழ்நாடு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ்
பார்வையிட்டார் இவருடன் மருத்துவமனையின் மார்க்கெட்டிங் துணை தலைவர் நாராயணன் அவர்கள் உடனிருந்தார்.