May 4, 2016 தண்டோரா குழு
சீனாவில் ஹாங் ஹாங் என்ற குழந்தை பிறந்த போது மற்ற எல்லா பெற்றோரும் போலவே அவனது பெற்றோர்களும் மகிழ்ந்தனர்.
அவனுடைய வலது கையில் ஏழு விரல்களும் இடது கையில் எட்டு விரல்களும் காணப்பட்டது. அதே போல் இரண்டு கால்களிலும் எட்டு விரல்கள் இருந்ததைக் கண்டு அவனுடைய பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
பாதிக்கப்பட்ட இந்தக் குழந்தைக்கு கூடுதல் கை விரல்கள் மற்றும் கால் விரல்கள் உண்டு ஆனால் இரண்டு கைகளிலும் கட்டைவிரல் கிடையாது.
இந்தப் பிரச்சனை இந்தக் குழந்தைக்கு மட்டுமல்ல இதன் தாயும் அதே நோயால் பாதிக்கப்பட்டவர் தான்.
ஹாங் ஹாங்யின் தாயிக்குக் கையில் ஒரு கூடுதல் விரலும் அதே போல ஒரு கூடுதல் கால் விரலும் உண்டு. ஹாங் ஹாங் கருவில் இருந்த போது அவனுக்கும் இந்தப் பிறவி நோய் தாக்கி விடுமோ என்று அவனுடைய பெற்றோர் கவலை கொண்டனர்.
குழந்தை பிறப்பதற்கு முன்பாக செய்த பரிசோதனையில் எந்தக் குறைபாடுகளும் காணப்படவில்லை.
இந்தக் குறைபாட்டிற்கு போலிடாக்டிலிசம் என்று பெயர். அதாவது சாதாரண எண்ணிக்கைக்கு அதிகமாக கை விரல்களோ அல்லது கால் விரல்களோ உள்ள நிலையை இப்படிக் கூறுவர்.
அவனைப் பல முறை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக கொண்டு சென்றோம்.
அவனுக்கு ஆறு மாதம் முதல் ஒரு வயதிற்குள் அறுவை சிகிச்சை செய்தால் பூரண சுகம் கிடைக்கும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர் என அந்தக் குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தச் சிகிச்சைக்கு 15,548 முதல் 77,740 டாலர் வரை தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் நாங்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் என்பதால் அறுவை சிகிசைக்கான தொகையை அவர்களால் சேர்க்க முடியவில்லை. இதன் காரணமாக உள்ளூர் தொண்டு நிறுவனத்திடம் தங்கள் குழந்தைக்கு உதவுமாறு அவர்களைக் கேட்டு உள்ளனர்.
ஹாங் ஹாங்யின் பிரச்சனை மற்ற உயிர்க் கொல்லி நோயைப் போல் இல்லாததால் அதற்கு முன்னுரிமை தரப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.