August 10, 2017 தண்டோரா குழு
அமெரிக்காவில் கைகள் இல்லாத ஒருவர் வில்வித்தை போட்டியில் கலந்துக் கொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
அமெரிக்காவின் இண்டியானா மாகணத்தில் மாட் ஸ்டுஸ்மான் என்னும் 35 வயது ஆணுக்கு பிறப்பிலிருந்தே இரண்டு கைகளும் கிடையாது. இண்டியானா மாகணத்தின் வெஸ்ட்பீல்ட் என்னும் இடத்தில் நடந்த “Target Competition” என்னும் வில்வித்தை போட்டியில் கலந்துக் கொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.மேலும் வெஸ்ட்பீல்டில் உள்ள “USA Archery Outdoor National Championship” போட்டியில் கலந்துக் கொண்டு இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு முதல் வில்வித்தை செய்ய தொடங்கினார் ஸ்டுஸ்மான்.அவர் கையில்லாமல் வேட்டையாடுவது, காலை பயன்படுத்தி வாகனம் ஓட்டுவதும்,கை இல்லாத நான், கால்களை மட்டும் பயன்படுத்தி வில்வித்தை போட்டியில், இரண்டு கைகள் உடைய உலகின் பிரபல வில்வித்தை வீரர்களுடன் போட்டியிட முடியும் என்று நிரூபித்து வருகிறேன். என்னுடைய முயற்சிகள் எனக்கு நல்ல பலனை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.
மேலும்,கடந்த 2012ம் ஆண்டு நடந்த பாரா ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டியில்,கலந்துக் கொண்டு வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.