• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கைலாஷ் சத்யர்த்தி வீட்டில் திருடப்பட்ட நோபல் பரிசு நகல் மீட்பு

February 13, 2017 தண்டோரா குழு

நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யர்த்தி வீட்டிலிருந்து திருடப்பட்ட நோபல் பரிசின் பிரதி மற்றும் பொருள்களை புதுதில்லி காவல் துறையினர் மீட்டுள்ளனர்.

இது குறித்து புது தில்லி காவல்துறை அதிகாரி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 12) கூறியதாவது:

“நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யர்த்தி வீட்டில் இருந்த நோபல் பரிசின் பிரதி மற்றும் பொருள்களை திருடிய மூன்று சகோதரர்கள் ராஜன் (25), சுனில் (28) மற்றும் வினோத் (3௦) ஆகியோரைக் கைது செய்துள்ளோம். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பொருள்களை மீட்டுள்ளோம். இந்தச் சம்பவம் புது தில்லியின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள கைலாஷ் சத்யர்த்தி வீட்டில் பிப்ரவரி 2-ம் தேதி நடந்தது.

2௦15-ம் ஆண்டு கைலாஷ் சத்யர்த்தி தனக்குக் கிடைத்த நோபல் பரிசை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் கொடுத்தார். அந்தப் பரிசு குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதன் நகலை கைலாஷ் சத்யர்த்தி தன்னுடைய வீட்டில் வைத்திருக்கிறார்.

சம்பவம் நடந்த நேரத்தில் கைலாஷ் சத்யர்த்தி அமெரிக்காவில் இருந்தார். பனாமா நாட்டின் அதிபர் மற்றும் பிரபலங்களுடன் இரவு விருந்தில் பங்கேற்றார். அப்போது அவருக்கு திருட்டு குறித்த தகவல் கிடைத்துள்ளது.

கைலாஷ் சத்யர்த்தி வீட்டின் அருகில் இருந்த மற்ற இரண்டு வீடுகளும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. வீட்டில் உள்ள நகைகளை மட்டுமே கொள்ளையர் எடுத்துச் சென்றுள்ளனர். மற்ற விலையுயர்ந்த பொருள்கள் கொள்ளையடிக்கப்படவில்லை.

இந்த திருட்டுகள் குறித்து விசாரணைக்காக ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. விசாரணைக்குப் பிறகு, பல திருட்டு குற்றங்களில் தேடப்பட்டு வந்த ராஜன் என்ற குற்றவாளிதான் காரணம் என்று கண்டுபிடித்தனர்.

புது தில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்திய சோதனையில் ராஜனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையை அடுத்து மற்ற இருவரும் பிடிபட்டனர்”.

இவ்வாறு காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

மேலும் படிக்க