• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கை கொடுத்த பாம்பி பக்கெட் ஆப்ரேசன் – 95% தீ முழுமையாக அணைக்கப்பட்டு விட்டது

April 18, 2023 தண்டோரா குழு

கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த 6 நாளாக பரவி வந்த காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர் நேற்று முன் தினம் ஈடுபடுத்தப்பட்டது. இதில் 95 சதவீதம் தீ முழுமையாக அணைக்கப்பட்டு விட்டது.

கோவை மாவட்டம் ஆலாந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட, மதுக்கரை வனச்சரகம் நாதேகவுண்டன் புதூர், மச்சினாம்பதி, பெருமாள்பதி ஓட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 11-ம் தேதி காட்டுத்தீ ஏற்பட்டது.இது குறித்து தகவல் அளிக்கப்பட்ட நிலையில், வனத்துறையினர் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ அப்பகுதியில் தொடர்ந்து பரவியது. பாறை பகுதியாக இருந்ததால், தீயை அணைக்கும் பணிகளில் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும்,தொடர்ந்து வனத்துறை பணியாளர்கள் தீயை அணைக்க போராடினர். இவர்களின் தொடர் போராட்டத்தினால் நேற்று முன்தினம் தீ பரவல் குறைந்தது. மலையின் இடது புறம் முழுவதும் தீ அணைக்கப்பட்டது. இருப்பினும், அங்குள்ள வனத்தில் இருந்த காய்ந்த மூங்கில்களில் தீ தொடர்ந்து பரவி வந்தது.

தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதையடுத்து, காட்டுத்தீயை ஹெலிகாப்டர் பயன்படுத்தி அணைக்க முடிவு செய்தனர்.இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் அனுமதி கோரினர். அவரின் முயற்சியால், தீயை அணைக்கும் பணியில் விமானப்படை ஹெலிகாப்டர் பயன்படுத்த அனுமதி கிடைத்தது. இதனை தொடர்ந்து சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து எம்.ஐ 17 வகை ஹெலிகாப்டர் புறப்பட்டு தீ எரிந்து கொண்டிருந்த பெருமாள்பதி அருகே நேற்று காலை 6.30 மணியளவில் வந்தடைந்தது. பின்னர், கேரளா மாநிலம் மலம்புழா அணையில் இருந்து தண்ணீர் எடுத்து வரப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

காலையில் 6.30 மணிக்கு துவங்கிய பணி மாலை 5.30 மணி வரை என நடந்தது. இதில், மொத்தம் 10 முறை ஹெலிகாப்டர் தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த முயற்சியால் தற்போது தீ பரவல் என்பது கட்டுக்குள் வந்துள்ளது. மேலும், கடந்த 6 நாட்களாக ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக சுமார் 100 எக்ேடர் வரை வனப்பகுதி தீயில் கருகியுள்ளது.

விமானப்படை எம்.ஐ17 வகை ஹெலிகாப்டர் மூலம் கேரளா மாநிலம் மலம்புழா அணையில் இருந்து ஒரு முறைக்கு 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு தீ அணைக்கப்பட்டது. அதன்படி, காலை முதல் மாலை வரை மொத்தம் 10 முறை மூன்று பிரிவுகளாக ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. இதில், முதல் பிரிவின் போது தொடர்ந்து 4 முறை தண்ணீர் கொண்டு வரப்பட்ட நிலையில், 2 மணி நேரம் ஹெலிகாப்டருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. பின்னர், 2-வது பிரிவில் 3 முறையும், மூன்றாவது பிரிவில் தொடர்ந்து 3 முறையும் ஹெலிகாப்டர் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தீயை அணைக்க மொத்தம் 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘பாம்பி பக்கெட்’ ஆப்ரேசன்:

ஹெலிகாப்டர் மூலம் தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ‘பாம்பி பக்கெட்’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதாவது பல ஆயிரம் அடிகள் பறந்து பல ஆயிரம் லிட்டர் தண்ணீரை ஹெலிகாப்டரில் எடுத்துச் செல்வது மற்றும் தீயை அணைக்க பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வது பாம்பி பக்கெட் என சொல்லப்படும். கோவா மற்றும் கொச்சிக்கு அருகே ஏற்பட்ட தீயை அணைக்க, இதேபோன்ற பாம்பி பக்கெட் தீயணைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. கோவை வனப்பகுதியில் இந்த முயற்சிகள் காரணமாக 2 முக்கிய மண்டலங்கள் முழுமையாக அணைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க