March 12, 2022
தண்டோரா குழு
கோயம்புத்தூர், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் நிறுவனரும் தற்போதைய கௌரவத் தலைவருமான முனைவர் மா.ஆறுச்சாமி 12.03.2022 அன்று காலை 10.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரது பூதவுடல் அஞ்சலிக்காக 131/82, மேற்கு சம்பந்தம் சாலை, ஆர்.எஸ்.புரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அன்னாரது இறுதிச் சடங்கு 13.03.2022 அன்று பிற்பகல் 12.30 மணியளவில் அவரது பிறந்த ஊரான வழுக்குப்பாறை ராயகவுண்டனூர் பண்ணை இல்லத்தில் நடைபெறவுள்ளது.
இவருடைய காலத்தில் தன்னாட்சிக் கல்லூரி, ஆற்றல்சார் கல்லூரி, சீர்மிகு கல்லூரி முதலிய தகுதிகள் பல்கலைக்கழக நிதிநல்கைக்குழுவால் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரிக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் சங்கத்தின் தலைவராகவும் இந்திய அறிவியல் கழகத்தின் கோவை மண்டலப் பொறுப்பாளராகவும் நீண்ட காலம் பணியாற்றி உயர்கல்வித்துறைக்குத் தன் பெரும் பங்கை நல்கியவர் முனைவர் மா.ஆறுச்சாமி என்பது குறிப்பிடத்தக்கது.