April 29, 2017
தண்டோரா குழு
கொடநாடு பங்களாவில் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டது தொடர்பாக 8 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் காவலாளி ஓம்பகதூர் மர்மான முறையில் படுகொலை செய்யபட்டார்.
இதுதொடர்பாக 8 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம், வயநாடு, மலப்புரம், திருச்சூர் பகுதியை சேர்ந்த அவர்கள் விரைவில் கோவை அழைத்து வரப்பட உள்ளனர்.
காவலாளி கொலை தொடர்பாக அனைவரையும் கைது செய்ய வேண்டியுள்ளதால், ரகசிய விசாரணை நடைபெற்று வருகிறது. முக்கிய குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் நீலகிரி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ்.பி., முரளி லம்பா கூறியுள்ளார்.