April 28, 2017
தண்டோரா குழு
கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் கேரளாவில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 24ம் தேதி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில்,கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை செய்தது தொடர்பாக கேரளாவில் ஒருவர் சிக்கியுள்ளார்.கேரளாவை சேர்ந்த அந்த நபரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் ஆவணங்கள், நகைகளை எடுத்துச் செல்ல அந்த நபர் வந்தாரா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.