• Download mobile app
25 Apr 2025, FridayEdition - 3362
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொண்டையம்பாளையம் நாற்றாங்கால் பண்ணையில் ஆட்சியர் ஆய்வு

July 29, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சர்க்கார்சாமக்குளம் ஊராட்சி ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்கால் பண்ணையினை மாவட்ட ஆட்சியர் மீரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியம், கொண்டையம்பாளையத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி மணிமண்டபம் அருகில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6.78 லட்சம் மதிப்பில் நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நாற்றங்கால் பண்ணையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் சமீரன் அங்கு வளர்க்கப்பட்டுள்ள மர வகைகளின் விவரங்கள், எத்தனை மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன என்பது குறித்து கேட்டறிந்தார்.அதனைத்தொடர்ந்து அருகில் உள்ள ஒஎஸ்ஆர் இடத்தில் சப்போட்டா மரம், பாக்கு மரம், பூவரசு மரம் உள்ளிட்ட பலவகையான மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதை அவர் பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து எஸ்.எஸ்.குளம் வட்டார வளர்ச்சி அலுவலகம்,பேரூராட்சி அலுவலகங்களில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். இந்த அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பதிவேடு, நிலம் தொடர்பான பதிவேடுகள் உள்ளிட்ட பதிவேடுகளை ஆய்வு செய்து அனைத்து விதமான பதிவேடுகளை முறையாக பராமரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் எஸ்.எஸ்.குளம் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள், சாலைப்பணிகள் குறித்து கேட்டறிந்து பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முன்னுரிமை அடிப்படையில் விரைந்து மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின்போது சர்க்கார் சாமக்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகாமி, அனிதா, ஒன்றிய பொறியாளர் சந்திரகலா, மண்டல துணை வட்டார அலுவலர் அம்மு உட்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க