• Download mobile app
30 Nov 2024, SaturdayEdition - 3216
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரோனா 3 வது அலை முன்னெச்சரிக்கை: கோவையில் குழந்தைகளுக்கு என 1699 படுக்கைகள் தயார்

August 16, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் கொரோனா 3 வது அலையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக குழந்தைகளுக்கு என 1699 படுக்கைகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளார்.

மேலும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சாதாரண படுக்கைகள் 7 ஆயிரத்து 183, ஆக்ஸிஜன் படுக்கைகள் 4 ஆயிரத்து 526, தீவிர சிகிச்சை படுக்கைகள் 646 என மொத்தம் 12 ஆயிரத்து 355 படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு வரும் பட்சத்தில் அவர்களுக்கு என பிரத்யேகமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சாதாரண படுக்கைகள் 573, ஆக்ஸிஜன் படுக்கைகள் 959, தீவிர சிகிச்சை படுக்கைகள் 167 என மொத்தம் 1699 படுக்கைகள் சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

அரசின் சார்பாக மொத்தம் 14 சிறப்பு கொரோனா தனிமைப்படுத்தும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.அவற்றில் 2 தனிமைப்படுத்தும் மையங்களில் சித்தா மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஆக்ஸிஜன் வசதிகளுடன் கூடிய கொரோனா தனிமைப்படுத்தும் மையம் கொடிசியா வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் 14 தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் கர்ப்பிணி பெண்களுக்கு என 3 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 2 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், 13 அரசு மருத்துவமனைகள் மற்றும் 114 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளன.தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 142 கிலோ லிட்டர் திரவ ஆக்ஸிஜன் கொள்ளளவு வசதி உள்ளது.

மேலும் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, பொள்ளாச்சி ஆகிய மருத்துவமனைகளில் கூடுதலாக முறையே 6 ஆயிரத்து 113 கிலோ லிட்டர் திரவ ஆக்ஸிஜன் கொள்ளளவு கட்டமைப்பு நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை, கோவை அரசு மருத்துவமனை மற்றும் வட்ட அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பெரிய மற்றும் சிறிய அளவிலான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் 2 ஆயிரத்து 233 எண்ணிக்கையில் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
அரசு, தனியார் மருத்துவமனைகளில் அவசர காலங்களில் பயன்படுத்துவதற்கு என பிரத்யேகமாக 2 ஆயிரத்து 488 ஆக்ஸிஜன் உருளைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

1077 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் விவரம், தமிழக முதலமைச்சரின் காப்பீடு தொடர்பான விவரம், தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் போன்ற பொதுமக்களின் சந்தேகங்களுக்கு 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்க மாவட்ட சிறப்பு கொரோனா கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

வெளி மாநிலங்களில் இருந்து வரும் பொது மக்களை 24 மணி நேரமும் கண்காணிக்க மாவட்ட எல்லைகளில் உள்ள 14 சோதனை சாவடிகள், கோவை சர்வதேச விமான நிலையம் மற்றும் முக்கிய ரயில் நிலையங்களில் சுழற்சி முறையில் வருவாய் துறை, மருத்துவ துறை, காவல்துறை அலுவலர்களை உள்ளடக்கிய கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வரும் பொது மக்கள் அனைவரும் பயணம் மேற்கொள்ளும் நேரத்திற்கு முன் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா சோதனை சான்று அல்லது 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். மேலும் பயணம் மேற்கொள்ளும் அனைவரும் கட்டாயம் இ-பதிவு செய்திருக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க