January 24, 2022 தண்டோரா குழு
தற்போதைய கொரோனோ மற்றும் ஒமிக்ரான் பாதிப்பில் இருந்து தப்பிக்க நிலவேம்பு கசாயம் சிறந்தது என கோவையை சேர்ந்த பாபுஜி சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
கோவை மலுமிச்சம்பட்டி ஸ்ரீ நாகசக்தி அம்மன் பீடதலைவர் சித்தர் சிவசண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள் பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்குவதற்கு வாகன அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம் அளித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ,
இந்தியாவில் தற்போது மூன்றாவது அலை கொரோனோ மற்றும் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருவதாக கூறிய அவர், குறிப்பாக தமிழகத்தில் தினமும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார். கடந்த ஆண்டு கொரோனோ பாதிப்பின் போது நிலவேம்பு கசாயம் , கபசுரக் குடிநீர் ஆகியவற்றை நாகசக்தி அம்மன் சமூக ஆன்மீக அறக்கட்டளை சார்பில் தமிழகம் முழுவதும் வழங்கியதாக குறிப்பிட்ட அவர், நிலவேம்பு கசாயம் குறித்து பிரச்சாரம் செய்யவும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் கபசுர குடிநீர் வழங்கவும் எங்களுக்கு வாகனங்கள் அனுமதி கடிதத்தை மாவட்ட ஆட்சியர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு நுகர்வோர் கல்வி மையத்தின் பொது செயலாளர் ரமேஷ் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.