April 8, 2016 வெங்கி சதீஷ்
இந்திய அளவில் சுற்றுலாத்துறையில் முன்னணியில் இருக்கும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. கடலும் அதை ஒட்டிய மலைப்பகுதியும் அந்த மாநிலத்தின் அழகை அதிகரித்து சுற்றுலா பயணிகளைக் கவர்ந்திழுக்கிறது.
இவற்றில் அதிகப்படியான மக்கள் ரசிப்பது ஆற்றுப் பகுதிகளில் எதிர்த்து வரும் நீரில் படகு இல்லம் மற்றும் போட் ஆகியவற்றில் மேற்கொள்ளும் பயணம் தான். இதைக் கருத்தில் கொண்டு கேரளா அரசு அங்கு நீரிலும் நிலத்திலும் பயணிக்கும் பேருந்தை இயக்கி வருகிறது. இது முழுக்க முழுக்க விசேசமாக வடிவமைக்கப்பட்டது.
8 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணம் செய்ய விசேஷமாக வடிவமைக்கப்பட்ட இந்தப் படகுகள் சுற்றுலாப் பயணிகளை மிகவும் அதிகம் கவர்கிறது.
இந்தப் படகு சுமார் அரைமணி நேரம் பயணம் செய்து ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லும் பின்னர் அங்கிருந்து மீண்டும் துவங்கிய இடத்திற்கே வந்துவிடும். இதில் பயணிகள் ஒருமுறையும் பயணிக்கலாம்.
அல்லது பலமுறையும் பயணிக்கலாம் ஆனால் அதற்கு முன்பதிவு செய்வது கட்டாயம். எனவே இந்தாண்டு அதிக சுற்றுலா பயணிகளைக் கவரும் என எதிர்பார்க்கப் படுவதால் கேரளா செல்ல நினைக்கும் பயணிகள் இந்தச் சேவையை முன்பதிவு செய்வது நல்லது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீரில் செல்லும் பேருந்தில் செல்லும்போது குழந்தைகள் அடையும் சந்தோசம் சொல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.