March 1, 2022 தண்டோரா குழு
அருள்மிகு கோணியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை மதியம் 2 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளதால் அன்று மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம்
செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி சாலையிலிருந்து உக்கடம் வழியாக நகருக்குள்
வரும் அனைத்து வாகனங்களும் சுங்கம் பைபாஸ், ரயில்வே மேம்பாலம், திருச்சி சாலை கிளாசிக் டவர் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி சாலையிலிருந்து உக்கடம் வழியாக தடாகம் ரோடு மற்றும் மேட்டுப்பாளையம் சாலை செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் சுன்னாம்பு காளவாய் புட்டுவிக்கி சாலை, சேதுமாவாய்க்கால் செக்போஸ்ட், சிவாலயா
சந்திப்பு, ராமமூர்த்தி ரோடு வழியாக காந்தி பார்க்கை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
அவிநாசி சாலையிலிருந்து வரும் வாகனங்கள் அவினாசி மேம்பாலம் வந்து கூட்செட் ரோடு வழியாக சென்று கனரக வாகனங்கள் கிளாசிக் டவர் வழியாகவும், இலகுரக வாகனங்கள் வின்சென்ட் ரோடு வழியாகவும் செல்ல வேண்டும். திருச்சி சாலையிலிருந்து வைசியால் வீதி வழியாக பேருர் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் சுங்கம் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் வந்து பேருர் பைபாஸ் ரோடு வழியாக சிவாலயா சந்திப்பை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
பேரூரிலிருந்து செட்டி வீதி, ராஜ வீதி வழியாக நகருக்குள் வரும் வாகனங்கள் சலிவன் வீதி வழியாக காந்திபார்க் அடைந்து நகருக்குள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். பேருரிலிருந்து பாலக்காடு ரோடு செல்லும் வாகனங்கள் சிவாலயா சந்திப்பில் வலது பக்கம் திரும்பி புட்டுவிக்கி ரோடு வழியாகவும், உக்கடம் செல்லும் வாகனங்கள் பேருர் ரோடு அரசு மேல்நிலை பள்ளி சந்திப்பிலிருந்து வலது பக்கம் திரும்பி பேருர் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லாம்.
தடாகம் சாலையிலிருந்து பாலக்காடு செல்லும் அனைத்து வாகனங்களும் பொன்னையாராஜபுரம், சொக்கம்புதூர், சிவாலயா தியேட்டர் சந்திப்பு, பேரூர் பைபாஸ்ரோடு வழியாக உக்கடம் அடைந்து செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம். சுக்கரவார்பேட்டை ரோடிலிருந்து தெலுங்கு பிராமினர் வீதி வழியாக ராஜ வீதி
செல்லும் வாகனங்கள் காந்திபாாக், சொக்கம்புதூர்ரோடு வழியாக சிவாலயா சந்திப்பு அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
சுக்கரவார்பேட்டை சாலையிலிருந்து தியாகி குமரன் வீதி வழியாக ராஜ வீதிக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. கனரக வாகனங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நகருக்குள் வர அனுமதி இல்லை. தேர் வரும் ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கே.ஜி.வீதி ஆகிய சாலைகளில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை எந்த வாகனமும் நிறுத்த அனுமதி இல்லை.