October 5, 2017 தண்டோரா குழு
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
குஜராத்தில் கடந்த 2002-ல் நடந்த கோத்ரா ரயில் எரிப்புக்கு பிறகு குஜராத்தில் நடந்த மதக் கலவரங்களில் முஸ்லீம்கள் பலர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, சிறப்பு புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி 68 பேர் கொல்லப்பட்ட வழக்கில் மோடி உள்ளிட்டோர் குற்றவாளிகள் அல்ல என அறிக்கை அளித்தனர்.இதனை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது.
இதைத்தொடர்ந்து, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரியின் மனைவி ஸாக்கிய ஜாப்ரி மற்றும் சமூக செயற்பாட்டாளர் தீஸ்டா செட்டால்வத் ஆகியோர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்நிலையில், இந்த மேல்முறையீட்டை குஜராத் உயர்நீதிமன்றம்நிராகரித்துள்ளது.