July 23, 2022 தண்டோரா குழு
உள்நாட்டு உற்பத்தியாளர்களின் தேவைகளுக்கு போக மீதமிருந்தால், மட்டுமே வெளிநாடுகளுக்கு ஹோம்பர்ன் ஆயில் காட்டன் வேஸ்ட் களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்கு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்க தலைவர் அருள்மொழி கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள தனியார் உணவக அரங்கில் ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்கமான ஒஸ்மா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் இசி உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் வாயிலாக, இச்சங்கத்தின் வழிகாட்டியாக, அனுஷ் ராமசாமி,முருகேசன், தலைவராக அருள்மொழி,துணை தலைவராக செந்தில் குமார், செயலளாராக, சந்திரசேகரன், இணை செயலாளராக சுரேஷ் குமார், ஆகியோர் தேர்வு செய்யபட்ட நிலையில் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பை இவர்கள் வழிநடத்தினர்.
இதனை தொடர்ந்து,செய்தியாளர்களை சந்தித்து பேசிய இச்சங்கத்தின் தலைவர் அருள் மொழி
தமிழ்நாடு முழுவதும் ஒயி மில்கள் 600க்கும் மேற்பட்டு உள்ளது.அவற்றில் இருந்து நாள் ஒன்றுக்கு 25லட்சம் கிலோ காட்டன் நூல் உற்பத்தி செய்து வருகின்றோம். இதில் நாங்கள் அரசுக்கு செவையாற்றும் வகையில், பெட் பாட்டில் என்றழைக்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை இந்த ஒயி மில்களில், பெட் பாட்டில், பைபர், மற்றும் துணிவகைகளை, கொண்டு பைபராக மாற்றி அதனை நூலாக தயாரித்து, வருகின்றது.
இந்த நூல்களில் இருந்து விலை குறைந்த விலையில் ஜவுளி தயாரிப்புகளை உற்பத்தி செய்து வருகின்றது.இத்தகைய சேவைகளை செய்து வரும் ஒயி மில் நிர்வாகிகளுக்கு அரசாங்கம் சில சலுகைகளை செய்து தர வேண்டும் என்றும், அதனை இச்சங்கத்தின் வாயிலாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுப்பதாகவும், அதில் மூலப்பொருட்களான ஹோம்பர்ன் ஆயில் காட்டன் வேஸ்ட் என்பது முக்கிய தேவையாக ஒயி மில்களுக்கு உள்ளது.
இந்த வகை ஆயில், அரசால் அச்சடிக்கபடும் ரூபாய் நோட்கள் தயாரிக்க பெரிய அளிவில் தேவை படுகின்றது, இந்த வகை ஹோம்பர்ன் ஆயில் காட்டன் வேஸ்ட், வகைகளை ஐரோப்பிய நாடுகளுக்கு மத்திய அரசு, ஏற்று மதி செய்து வருகின்றது. இதனால் நமது உள் நாட்டு தேவைக்கு அதிக அளவில் தட்டு பாடு ஏற்படுகின்றது, இதற்காக பலமுறை மத்திய அரசிடம், எடுத்துரைக்கபட்டும், அரசு இன்னும் இதற்க்கு செவி சாய்க்கவில்லை, எனவே இந்த வகை ஹோம்பர்ன் ஆயில் காட்டன் வேஸ்டை உள்நாட்டு தேவைகளுக்கு போக மீதமிருந்தால் மட்டுமே வெளிநாட்டு ஏற்றுமதிக்கு அனுமதியுங்கள் அல்லது, ஏற்றுமதி வரி கிலோ வுக்கு 20 விதிக்க வேண்டும், என்றும் உள்நாட்டு மில் வகைகளுக்கு, ஹோம்பர்ன் ஆயில் காட்டன் வேஸ்ட் கள், இலகுவாக கிடைக்க வழி வகை செய்ய வேண்டும், என்ற கோரிக்கையை இச்சங்கத்தின் வாயிலாக மத்திய அரசுகளுக்கு, வலியுறுத்தி உள்ளோம்.
மத்திய, அரசு இதனை ஏற்று இந்த ஹோம்பர்ன் ஆயில் காட்டன் வேஸ்ட் உள்ளுர் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்க வழி வகை செய்யும் என்று எங்களது சங்கம் நம்புவதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.