• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோயம்புத்தூரில் ஜி ஸ்கொயர் சிட்டி 2.0 எனும் புதிய திட்டம் துவக்கம் !

March 31, 2023 தண்டோரா குழு

தென்னிந்தியாவின் பிரமாண்டமான, மனைவிற்பனை மேம்பாட்டு நிறுவனமான ஜி ஸ்கொயர், இன்று கோயம்புத்தூரில் ஜி ஸ்கொயர் சிட்டி 2.0 எனும் புதிய திட்டத்தைத் துவக்கியது.

110 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாட்டின் முதலாவது ஒருங்கிணைந்த ஸ்மார்ட் சிட்டி திட்டமாகும் இது. ஏற்கனவே 127 ஏக்கர் பரப்பளவில் அமைந்த ஜி ஸ்கொயர் திட்டத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இந்த புதிய திட்டம் துவக்கப்பட்டுள்ளது.நாட்டிலேயே முதலாவது புதுமைத்திட்டமான ஜி ஸ்கொயர் 2.0, 1668 வீட்டுமனைகள் மற்றும் 8 வணிக மனைகளுடன், சர்வதேச தரத்திலான 90 நவீன வசதிகளுடன் அமைகிறது.மேலும் இந்தியாவிலேயே முதலாவதும், ஒரே அறிமுகமானதுமாக டிரைவ் – இன் தியேட்டர் உள்ள, இந்தியாவின் ஒரே மனைப்பிரிவும் இது தான்.ஆடம்பரமான கிளப் ஹவுஸ்கள் மற்றும் ஹெலிபேடு வசதி கொண்டது.

ஏற்கனவெ இருக்கும் 1958 வில்லா மனைகள், 15 வணிக மனைகள் 150க்கும் மேற்பட்ட சர்வதேச வசதிகள் கொண்ட திட்டத்துடன், இந்த புதிய திட்டமும் ஒருங்கிணையும் போது, தமிழ்நாட்டில் 237 ஏக்கர் பரப்பளவில், 240 க்கும் மேற்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய ஒரே மிகப் பெரிய மனைத்திட்டம் இதுவாகவே அமையும்.நிலத்தடி மின்கேபிள், மழைநீர் வடிகால், அத்திக்கடவு குடிநீர் விநியோகம், ஜிபிஓஎன் கேபிள் என அனைத்து மனைகளுக்கும் வசதி செய்யப்படுகிறது.

மாநகரின் பிரமாண்ட வளர்ச்சியில், விமானநிலைய விரிவாக்கம், L & T பைபாஸ் சாலை விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம், மல்டி மோடல் லாஜிஸ்டிக் பார்க், பாதுகாப்பு தொழில் துறை காரிடார் அனைத்தும் அருகாமையில் அமைந்திருப்பதால், இந்த இடம் மிகச்சிறந்த முதலீடு மற்றும் ரியல் எஸ்டேட்டில் லாபகரமான திட்டமாகிறது.

ஜி ஸ்கொயர் சிட்டி 2.0 திட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசிய, ஜி ஸ்கொயர் ரியல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாலா ராமஜெயம் கூறியதாவது :-

இந்த புதிய திட்டத்தில், வணிக நோக்க்கிலான சிறப்புகளை விட, வாடிக்கையாளர் நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். வாடிக்கையாளர்களுக்கு மேலும் வசதிகளைக் கூடுதலாக்குதல் எனும் நோக்கில் அமைத்துள்ளோம். எங்களது முந்தைய திட்டமான ஜி ஸ்கொயர் சிட்டி பெருத்த வரவேற்பைப் பெற்றது. நான்கே நாட்களில் மனைப்பிரிவுகள் விற்றுத் தீர்ந்தன. 150 க்கும் மேற்பட்ட சர்வதேச தரத்திலான நவீன வசதிகள் அமையப் பெற்றதும் ஒரு காரணமாகும். சிறந்த முதலீட்டுக்கான வாய்ப்பாக இந்த புதிய திட்டமும் அமைகிறது. இப்போது 90 க்கும் அதிகமான, சர்வதேச தரத்திலான நவீன வசதிகளுடன், இந்தியாவிலேயே முதலாவதாக உள்ளேயே டிரைவ் – இன் தியேட்டரும் உருவாக்கப்படுகிறது. முந்தைய ஜி ஸ்கொயர் திட்டத்தில் வாய்ப்புக் கிடைக்கப் பெறாதவர்கள் புதிய ஜி ஸ்கொயர் சிட்டி 2.0 வில் பயன் பெறலாம்.

மேலும் இங்கு மனைகள் வாங்குவதிலும், முதலீட்டிலும் பெறப்படும் எதிர்கால லாபகரத்தைச் சொல்லவேண்டியதே இல்லை. இந்த இடம் அப்படி L & T பைபாஸ் சாலை விரிவாக்கம், விமான நிலைய விரிவாக்கம், மல்டி மோடல் லாஜிஸ்டிக் பார்க், பாதுகாப்பு தொழில் துறை காரிடார், ஆகியவற்றுக்கு அருகாமையில் இருப்பது என்பதே சாதகமான விஷயமாகும். எதிர்காலத்தில் இங்கு நிலமதிப்பு விண்ணைத் தொடும்.

ஜி ஸ்கொயர் சிட்டி 2.0 வில் 1688 வீட்டுமனைகள் அமையும். 3 சென்ட் – ரூ.27 லட்சத்திலிருந்து தொடங்கு கிறது. முந்துவோருக்கு விலை சென்ட்க்கு ரூபாய் 8.95 லட்சமாகும் – இவ்வாறு கூறினார்.

மேலும் படிக்க