• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோயம்புத்தூர் இன்னர் வீல் சார்பாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளி நோயாளிகள் பிரத்யேக கட்டிடம்

November 11, 2021 தண்டோரா குழு

கோயம்புத்தூர் இன்னர் வீல் சார்பாக கோவை செல்வபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளி நோயாளிகள் பிரத்யேக கட்டிடம் அர்ப்பணிக்கப்பட்டது.

கோயம்புத்தூர் இன்னர் வீல் கிளப் சார்பாக பெண்குழந்தைகள் மற் றும் மகளிர் மேம்பாடுகளுக்கான பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்முறை படுத்தப்பட்டு வருகின்றது.குறிப்பாக ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்குவது, புறநகர் மற்றும் நகர்புற பகுதிகளில் தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு,மரங்கள் நடுவது, பசிப்பிணி போக்கும் முழுநேர அன்னதான திட்டம் என பல்வேறு சமுதாயம் நலம் சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோயம்புத்தூர் இன்னர் வீல் கிளப்பின் 46 வது ஆண்டு விழாவின் நலத்திட்ட பணிகளின் ஒரு பகுதியாக,கோவை செல்வபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுமார் நான்கு இலட்சம் மதிப்பீட்டில், வெளிநோயாளிகள் பிரிவினருக்கான தனி கட்டிடம் மற்றும் கழிவறைகள் கட்டி அர்ப்பணிக்கப்பட்டது.

இதற்கான விழாவில் புதிய கட்டிடத்தை இன்னர் வீல் கிளப்பின் தலைவர் அலமேலு சிவராமகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கோயம்புத்தூர் இன்னர் வீல் கிளப், தலைவர் தீபா வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்ற இதற்கான விழாவில்,முன்னால் தலைவர் கீதா பத்மநாபன், மாவட்ட தலைவர் அனிதா ஸ்ரீனிவாஸ்,மற்றும் கிளப் நிர்வாகிகள், புவனா சதீஷ்,பினால் ஷா,ராதிகா பரமேஷ்,ஜெயலட்சுமி ரமேஷ் உட்பட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க