September 2, 2023 தண்டோரா குழு
கோயம்புத்தூர் சகோதயா பள்ளிகளின் சார்பில் 2023-2024-ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் கால்பந்துப் போட்டிகள் கோவை சந்திரகாந்தி பப்ளிக் பள்ளியில் 30.8.2023 இல் துவங்கி 2.9.2023 வரை சிறப்பாக நடைபெற்றது.
இதில் 14,16,19 வயதிற்கு உட்பட்ட பிரிவுகளில் மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றன.64- பள்ளிகளிலிருந்து 1872 மாணவர்கள் பங்கேற்றனர். கோவை, பொள்ளாச்சி,திருப்பூர், ஈரோடு, உடுமலை, மேட்டுப்பாளையம், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களிலுள்ள பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.46 அணிகள் 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவிலும்,28 அணிகள் 16 வயதிற்கு உட்பட்டோர் பிரிவிலும்,43 அணிகள் 19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவிலும் பங்கு பெற்றனர்.
14 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் அணிகளுக்கு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெற்றது.திண்டுக்கல் பார்வதி அனுக்கிரஹா சர்வதேசப்பள்ளி முதல் இடத்தில் 8 இலக்கு பெற்றும்,cs அகாடமி 7 இலக்கு பெற்று இரண்டாமிடமும், நவபாரத் சர்வதேசப்பள்ளி 3 இலக்கு பெற்று மூன்றாமிடமும் BVM குளோபல் பள்ளி 1 இலக்கு பெற்று நான்காமிடத்தையும் பெற்றுள்ளது.
மேலும் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் சிறந்த கால்பந்து வீரராகத் திண்டுக்கல் பார்வதி அனுக்கிரஹா பள்ளியைச் சேர்ந்த செல்வன்.ஆயுஷ் ஸ்ரீராம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.16 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் அணிகளுக்கு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற்றது.CS அகாடமி- ஈரோடு 2 இலக்கு பெற்று முதலிடத்தையும் , SSVM வேர்ல்டு பள்ளி இரண்டாமிடமும், PSBB மில்லினியம் பள்ளி 1 இலக்கு பெற்று மூன்றாமிடத்தையும்,விவேகம் சீனியர் செகண்டரி பள்ளி, நான்காமிடத்தையும் பெற்றுள்ளது.
மேலும் 16 வயதிற்கு உட்பட்ட பிரிவில் சிறந்த கால்பந்து வீரராகத் CS அகாடமி – ஈரோடு பள்ளியைச் சேர்ந்த செல்வன். ஸ்ரீரித்திஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.19 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் அணிகளுக்கு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற்றது.CS அகாடமி – கோவை 3 இலக்கு பெற்று முதலிடத்தையும் , SSVM மேட்டுப்பாளையம் பள்ளி 1 இலக்கு பெற்று இரண்டாமிடமும், SSVM வேர்ல்டு பள்ளி மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளது.
சூர்யா அவர்களை கோயம்புத்தூர் பப்ளிக் பள்ளியிலிருந்து கோயம்புத்தூர் சகோதயா கூட்டமைப்புப் பள்ளிகளின் ஆய்வாளராக நியமித்திருந்தனர்.மூன்று பிரிவுகளில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும் ,கோப்பைகளும் வழங்கப்பட்டன.கோவை கால்பந்து சங்கத்திலுள்ள அதிகாரிகள் நடுவர்களாக இருந்து கால்பந்துப் போட்டிகளை தொடர்ந்து நான்கு நாட்களாக சிறந்த முறையில் நடத்த உதவி புரிந்தனர்.