• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோயம்புத்தூர் மாரத்தான் போட்டியில் தனது 11 ஆண்டுகால வெற்றிகரமான பங்களிப்பை பற்றி பகிர்ந்த எல்ஜி எக்யூப்மென்ட்ஸ்  

December 16, 2023 தண்டோரா குழு

உலகின் முன்னணிஏர் கம்ப்ரசர் உற்பத்தியாளர்களில் ஒன்றான எல்ஜி எக்யூப்மென்ட்ஸ்,உலகம் முழுவதும் உள்ள அதன் ஊழியர்கள்,சேனல் கூட்டாளர்கள் மற்றும் சமூகம்முழுவதும் நிலையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் வாழ்க்கைச் சூழலை வளர்ப்பதில்உறுதியாக உள்ளது.  

கோயம்புத்தூர் மாரத்தான்குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜெயராம் வரதராஜ் கூறுகையில், 

கோயம்புத்தூர் மாரத்தான்போட்டியின் 11 வது பதிப்பை நடத்துவதில் எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் முக்கிய  ஸ்பான்ஸராக இருந்து உதவி புரிவதில் பெருமிதம் கொள்கிறோம்.ஓட்டம், நடைபயிற்சி, உடற்தகுதி மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைத்து,புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த உதவுவதை இந்த மாரத்தான் நோக்கமாகக் கொண்டுள்ளது – 2023 பதிப்பு 1600+ எல்ஜி  ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட18500+ ஓட்டப்பந்தய வீரர்களின் பங்கேற்க்க உள்ளனர். 

கடந்த தசாப்தத்தில்,எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் மற்றும் கோயம்புத்தூர் மாரத்தான் இடையேயான ஒத்துழைப்பு, கோயம்புத்தூரில் உடற்தகுதி குறித்த கண்ணோட்டத்தை முற்றிலுமாக மாற்றியமைத்தது மற்றும் ஒரு முக்கியமான உடல்நலப் பிரச்சினையான புற்றுநோயை எதிர்ப்பதில் கணிசமான முன்னேற்றம் அடைய உதவியது.கோயம்புத்தூர் மாரத்தான்,புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளைக்கு (CCF) ஆதரவளிப்பதற்கும் ஒரு தளமாக கருதப்படுகிறது. பல ஆண்டுகளாக,இந்த நிகழ்வு பிராந்தியத்தில் புற்றுநோய் விழிப்புணர்வினை உண்டாக்கி வருகிறது. மராத்தானில் இருந்து கிடைக்கும் வருமானம்,கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளைக்கு அதன் பல்வேறு செயல்பாடுகளான ஸ்கிரீனிங், கவுன்சிலிங் மற்றும் ஆதரவு குழுக்கள் போன்றவற்றை விரிவுபடுத்த உதவுகிறது, அத்தியாவசிய சேவைகள் அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு அணுகக் கிடைப்பதை உறுதி செய்கிறது.

கூடுதலாக, அறுவை சிகிச்சைகள்,கீமோ தெரபி, கதிரியக்க சிகிச்சை, நோயறிதல் சோதனைகள்,மருத்துவமனை கட்டணம் மற்றும் மறுவாழ்வு சேவைகளை உள்ளடக்கிய புற்றுநோய் நோயாளிகளுக்கு வழங்கப்படும் பண உதவியை அதிகரிக்கவும் இந்த வருமானம் உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க