February 27, 2023 தண்டோரா குழு
அனைவருக்கும் உடல் ரீதியான அடையாளம் இருப்பதை போல, நிறுவனங்களுக்கு டிஜிட்டல் அடையாளம் இருப்பது மிகவும் அவசியம். அதுதான் நவீன உலகில் நம்மை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லும், என ரிலையன்ஸ் பேமெண்ட் சொலுஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஏஆர் ரமேஷ் கூறினார்.
கோயம்புத்தூர் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் (சிஎம்ஏ) வெள்ளிக்கிழமை கோயம்புத்தூரில் ஏற்பாடு செய்திருந்த “தேசிய மேலாண்மை தினம் மற்றும் விருது வழங்கும் விழாவில்” அவர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
சில்லரை வணிகத்தில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை 2016ம் ஆண்டு 40 சதவீதமாக இருந்தது, 2026ம் ஆண்டில் 65 சதவீதமாக உயர்வதற்கு எல்லா சாத்தியக் கூறுகளும் இருக்கின்றன.இம்மாதிரியான டிஜிட்டல் பண பரிவர்த்தனை, இணையவழியில் நடக்கும் என்எஃப்இடி, ஐஎம்பிஎஸ், கிரடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் வணிக வங்கிகளில் நடக்கும் பணவர்த்தனைகளை விட பல மடங்கு அதிகமாக உள்ளது. யுபிஐ போன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனை கால தாமதம் இன்றி உடனடியாகவும், குறைந்த செலவிலும் செய்ய ஏதுவாகிறது. எனவே, குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு டிஜிட்டல் பணவர்த்தனை மூலம் அதிக பயனடைய நிச்சய வாய்ப்புகள் இருப்பதாகவும் ரமேஷ் தெரிவித்தார்.
அந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த சிஎம்ஏ தலைவர் ஆர்.வரதராஜன், தாய் நிறுவனமான ஆல் இந்தியா மேனேஜ்மெண்ட் அசோசியாஷன் தொடங்குவதற்கு முன்னதாகவே, கோயம்புத்தூர் மேனேஜ்மெண்ட் அசோசியேஷனை முன்னாள் மெட்ராஸ் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜி.ஆர்.தாமோதரன் தொடங்கி வைத்ததாக கூறினார்.மேலும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மேலாளர்களாக மாறுவது நிறுவனங்களுக்கு அவசியமாகிறது என்றார்.
சிஎம்ஏ ஆண்டு தோறும் சிறப்பாக பணி புரிந்து பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிகோலிய தொழில் முனைவோர், மேலாளர்கள் மற்றும் மேலாண்மை பேராசியர்களை பாராட்டி விருது வழங்குகிறது.
இவ்வகையில், 2023ம் ஆண்டிற்கான விருதுகளை பெற்றவர்கள்;
1.சிஎம்ஏ டி.ஜே புரொபஷனல் கார்ப்பரேட் லீடர் விருது – ரமேஷ் பாபு ரங்கராஜன், நிர்வாக இயக்குநர் வேலான் வால்வ்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்
2.சிஎம்ஏ–ரூட்ஸ் தொழில்முனைவோர் விருது – டி.சதீஷ் குமார், தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர், மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் பிரைவேட் லிமிடெட்
3. சிஎம்ஏ-மஹேந்திரா எஸ்எம்இ தொழிற்முனைவோர் விருது – எம்.ராமகிருஷ்ணன், மேலாண் இயக்குனர், துளசி பார்மஸி
4. சிஎம்ஏ–ஜிஆர்ஜி பெண் தொழில்முனைவோர் விருது – பூங்கெடி பாலன்,செயல் இயக்குனர், பிரித்திவி உள்ளாடை நிறுவனம்.
5.சிஎம்ஏ–குவாட்ரா ஸ்டார்ட்-அப் விருது – புட்சி நிறுவனம். நிறுவனர் எம்.கே.தீபிகா.
6.சிஎம்ஏ–பிஎஸ்ஜிஐஎம் ஜிஆர்டி மேலாண்மை ஆசிரியர் விருது டாக்டர் பி.திருமூர்த்தி, பேராசிரியர், மேலாண்மை பள்ளி, பெரியார் பல்கலை கழகம்,
7.சிஎம்ஏ–எஸ்டிசி மேலாண்மை ஆய்வாளர் விருது – இணை பேராசிரியர் டாக்டர் டி.சூசனா, பிஎஸ்ஜிஐஎம்
8.சிஎம்ஏ–வணிகத்தின் நிலைத்தன்மைக்கான சேண்ட்ஃபிட்ஸ் நிறுவனத்திடமிருந்து புண்ணியவதி ரங்கநாதன் விருது – கிருஷ்ணவேணி ரவிசந்திரன், நிர்வாக இயக்குனர், கிருஷ்ணவேணி கார்பன் பொருட்கள் உற்பத்தி நிறுவனம்
9.சிஎம்ஏ–ஆர்விஎஸ் டிஜிட்டல் மாற்றத்திற்கான விருது – ராஜாமணி ரமேஷ், நிர்வாக இயக்குனர், ஜேனாடிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிஎம்எ துணைதலைவர் டாக்டர் நித்தியானந்தன் தேவராஜ், செயலாளர் ஆர்.ரவீந்திரன், பொருளாளார் என்.கிருஷ்ணகுமார், மற்றும் நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.