• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோயம்புத்தூர் விழா 2023 – முதலாம் நாள் நிகழ்வுகள் !

January 4, 2023 தண்டோரா குழு

கோயம்புத்தூர் விழாவின் 15வது பதிப்பின் முக்கிய நிகழ்வான ஸ்பெஷல் ஸ்போர்ட்ஸ் மற்றும் பாராஸ்போர்ட்ஸின் இரண்டாவது பதிப்பில் 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜனவரி 4, 2023 அன்று இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகளுக்கான இந்த விளையாட்டு போட்டிகளை கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையர் எம்.பிரதாப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு துவங்கிவைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கோவை மாநகராட்சி ஆணையர் எம்.பிரதாப்,

தமிழ்நாட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை எதிர்காலத்தில் அதிக அளவில் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்கச் செய்வதற்கான ஒரு துவக்கப்புள்ளியாக இந்த நிகழ்ச்சியை பார்க்கிறேன் என்றார். பங்கேற்பது மட்டுமல்ல, நீங்கள் அனைவரும் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்று கனவு காண வேண்டும் என்று அவர் கூறினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் கூறுகையில்,

கோவை மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்குவிக்கும் மாவட்டமாக மாறி வருகிறது, மேலும் இந்த சிறப்பு விளையாட்டு மற்றும் பாராஸ்போர்ட்ஸ் நிகழ்வு போன்ற முயற்சிகள் இந்த மாற்றத்தை வளர்க்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு கவனிப்பும் ஆதரவும் வழங்கப்படுவதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நமது முதலமைச்சரிடம் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை உள்ளது, மேலும் அவர் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்திவருகிறார்.

கோயம்புத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 15 பள்ளிகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட திறன் குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் சுமார் 100 க்கும் மேற்பட்ட பாரா விளையாட்டு வீரர்கள் இந்த மாபெரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

5 முதல் 18 வயது உட்பட்டோருக்கான சுமார் 12 போட்டிகள் (எளிய விளையாட்டுகள் முதல் தடகள விளையாட்டுகள் வரை) நடத்தப்பட்டன. பெரியோர்களுக்கான பாரா விளையாட்டுப் போட்டிகளில், பாரா வாலி-பால், பாரா கூடைப்பந்து, வாள்வீச்சு, பவர் லிஃப்டிங் மற்றும் வில்வித்தை போன்ற 5 விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

பள்ளிகளைச் சேர்ந்த (அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட) மாற்றுத் திறனாளி குழந்தைகள் இதில் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த விளையாட்டு விழாவில் பங்கேற்பதற்காக பள்ளிகளுக்குச் செல்ல இயலாத சுமார் 12 குழந்தைகள் இந்நிகழ்வில் கலந்துகொள்ள அழைத்துவரப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் 15 பள்ளிகளில் கிட்டத்தட்ட 10 பள்ளிகளுக்கான போக்குவரத்து வசதிகளை கோயம்புத்தூர் விழா குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

தி பிட்ச்:

கோயம்புத்தூர் விழாவின் மற்றுமொரு முக்கிய நிகழ்வான தி பிட்ச் – ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான நிதியுதவி மற்றும் வழிகாட்டி நிகழ்ச்சியின் 4வது பதிப்பு இன்று பிஎஸ்ஜி மேலாண்மை கல்லூரியின் மாநாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை ஹெல்த் பேசிக்ஸின் தலைவர் ஸ்வாதி ரோஹித் துவங்கி வைத்தார், அவர் பெண் தொழில்முனைவோரின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, ஜாவா கேபிட்டலின் முதலீட்டாளர் வினோத் சங்கர், தன்வி ஃபுட்ஸின் பிரபு காந்திகுமார் (BSE:TANVI), சூப்பர் கிளஸ்டர்பையின் விஷ்ணு பிரசாத் மற்றும் ஜூசி கெமிஸ்ட்ரியை சேர்ந்த பிரீதேஷ் ஆஷர் ஆகியோர் பங்கேற்று ஸ்டார்ட்அப் ஈகோ சிஸ்டம் 360 டிகிரி என்ற தலைப்பில் விவாதித்தனர். குழு விவாதத்தை எஃபிகா ஆட்டோமேஷனின் அர்ஜுன் பிரகாஷ் அவர்கள் நெறிப்படுத்தினார்.

நாடு முழுவதிலுமிருந்து 200-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் இந்த நிகழ்விற்கு பதிவு செய்திருந்தன. பல சுற்றுத் தேர்வுகளுக்குப் பிறகு, முதல் 10 ஸ்டார்ட்அப்கள் நிறுவனங்கள் – முதலீட்டாளர்கள், இன்குபேஷன் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பிராந்தியத்தின் முன்னணி வணிகர்கள் முன்னிலையில் களமிறங்கியது.

புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களான ஈ-சந்தை, IMHOTEF பார்மாசூட்டிகல்ஸ் மற்றும் கிரீன் ஸ்டோர் ஆகியவற்றுக்கு முறையே ₹1.2 கோடி, ₹70 லட்சம் மற்றும் ₹25 லட்சம் நிதியுதவியை நேட்டிவ்லீட் ஏஞ்சல் நெட்வொர்க் தி பிட்ச் பிளாட்பார்மில் மூலமாக வழங்கியது.

தி பிட்ச் 4வது பதிப்பின் முதல் பரிசை ப்ராட்கோ நிறுவனமும், இரண்டாம் பரிசை அல்ஃபோர்னா தேங்காய் சிப்ஸ் நிறுவனமும், மூன்றாம் பரிசை டோயோ நிறுவனமும் வென்றன. முதல் 3 இடங்களைத் தவிர, சிறந்த சமூக தாக்க தொடக்க நிறுவனமாக பிரிட்ஜ் ஹெல்த்கேரும், சிறந்த நிலைத்தன்மைகொண்ட ஸ்டார்ட் அப்பாக – மணி பின் மற்றும் சிறந்த பெண் தொழில்முனைவோராக ஸ்கேவெஞ்ச் எக்ஸின் ஹரிணி கந்தசாமி ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

10 இறுதிப் போட்டியாளர்களுக்கு சிறப்பு அங்கீகாரம் அளிக்கப்பட்டு 15 ஈகோ சிஸ்டம் கூட்டாளர்களின் மேற்பார்வையில்

ஒருமை பயணம்:

கோயம்புத்தூரில் உள்ள 26பள்ளிகளைச் சேர்ந்த 105 மாணவர்களை கோயம்புத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு வழிபாட்டுத் தலங்களுக்கு அழைத்துச் சென்று, அனைத்து மதங்களை புரிந்து கொள்ளவும், மதங்களின் மீதான அவர்களின் மதிப்பை வளர்க்கவும், பல்வேறு மத நம்பிக்கைகளை உணரவும் கோயம்புத்தூர் விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

கோனியம்மன் கோயிலில் காலை 9 மணிக்குப் துவங்கிய இந்த பயணம், செயின்ட் மைக்கேல் கதீட்ரல், டவுன்ஹாலுக்கு அருகிலுள்ள அதர் ஜமாத் மஸ்ஜித், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஜெயின் கோயில் மற்றும் குருத்வாரா சிங் சபாவுக்குச் அழைத்து செல்லப்பட்டனர்.

இந்தப் புனிதத் தலங்களுக்கு சென்ற அவர்களின் பயணத்தில் மாணவர்கள் ஒவ்வொரு மதத்தின் பழக்கவழக்கங்களின்படி வரவேற்கப்பட்டனர், மேலும் அந்தந்த மதங்களின் ஆன்மீகத் தலைவர்கள் அவர்கள் பின்பற்றும் கொள்கைகளையும் அவர்களின் வழிபாட்டு முறைகளையும் பகிர்ந்து கொண்டனர்.

வேற்றுமையில் ஒற்றுமையை போற்றும் வகையில் போதனூரில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அணைத்து மதத்தினரும் பங்கேற்ற பிரார்த்தனை கூட்டத்துடன் இந்த பயணம் முடிவடைந்தது.

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையர் எம்.பிரதாப், கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

மேலும் படிக்க