September 16, 2017 தண்டோரா குழு
தெலுங்கானா கோவில்களில் பணிபுரியும் பூசாரிகளுக்கு அரசு சம்பளம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கோவில்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பூசாரிகளுக்கு இனி அரசு சம்பளம் வழங்கப்படும் என தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.இத்திட்டம் தூப் தீப்-நைவேத்தியம் என்னும் திட்டத்தின் கீழ்,அறிவிக்கப்படவுள்ளதாகவும்,வரும் நவம்பர் மாதம் முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்திலுள்ள 1805 கோவில்களுக்கு, தூப் தீப்-நைவேத்தியம் என்னும் திட்டம் மூலம் மாதந்தோறும் வழங்கப்பட்ட ரூ 2,500, தற்போது ரூ6,000மாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் 3,000 கோவில்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் மூலம் 4,805 கோயில்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பூசாரிகள் பயனைடைய உள்ளதாக முதலமைச்சர் சந்திரசேகர ராவ்
தெரிவித்துள்ளார்.