April 26, 2023
தண்டோரா குழு
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி காவல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பிருந்தா தலைமையில் பொள்ளாச்சி பகுதியில் போதைப் பொருள்கள் விற்பனை செய்பவர்கள் மற்றும் பதுக்கி வைத்திருப்பவர்கள் விபரங்கள் சேகரிக்கப்பட்டு அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த ஜியாண்ட்ரா குமார்(31) கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள 211.800 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனிடையே கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 147 நபர்கள் மீது 137 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் 1580.120 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.