October 18, 2021 தண்டோரா குழு
கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷன் (CCF), கோயம்புத்தூர் மாரத்தானின் 9 வது பதிப்பின் துவக்கம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிகழ்வு மெய்நிகர் நிகழ்வாக டிசம்பர் 1 முதல் 31 டிசம்பர் 2021 வரை நடைபெறும்.
மெய்நிகர் பதிப்பு 2020 இன் வெற்றியைத் தொடர்ந்து, தற்போதுள்ள பெருந்தொற்று சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பங்கேற்பாளர்கள் அளைவரின் பாதுகாப்பிற்கும் முன்னுநிமை அளித்து, நகரத்தின் விருப்பமான மாரத்தானை மெய்நிகர் தளத்தில் தொடர ஏற்பாட்டுக் குழு திட்டமிட்டுள்ளது. இந்தக் கடினமான காலங்களை கடந்து உலகம் மெதுவாக மீண்டு எழும் நிலையில் இந்த நிகழ்வு அதன் பிரச்சார வாசகமான ‘ரைஸ் & ரன்’ மூலம் ரன்னர்களுக்கு ஒரு புதிய வலிமையை கொண்டுவரும் முனைப்புடன் உள்ளது.
இந்த புகழ்பெற்ற நிகழ்வின் உலகெங்கிலுமிருந்து 6500க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பங்குபெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது கோயம்புத்தூர் மாரத்தான் 221 மெய்நிகர் நிகழ்விற்கான பதிவு இப்போது துவங்கியுள்ளது.
கோயம்புத்தூர் மாரத்தானின் பந்தய இணை இயக்குனர் என். வள்ளியப்பன் கூறும்போது,
பெருந்தொற்று காலத்தின் போது கூட CCF ஐ ஆதரிக்க முடிந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். பெருந்தொற்று பல விஷயங்களில் ஒரு புதிய நெறிமுறையைக் கொண்டு வந்தாலும் துரதிர்ஷ்டமாக புற்றுநோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய சவால்கள் இன்றும் தொடர்கின்றன. CCF ஐ தொடர்ந்து ஆதரிக்கவும் எங்கள் நிகழ்வை விரும்பும் ரன்னர்களுக்கு மாற்றுத் தளத்தை வழங்குவதற்காகவும், இந்த மெய்நிகர் வடிவத்துடன் எங்கள் அணுகுமுறையை நாங்கள் மாற்றியமைத்துள்ளோம்.
கடந்த ஆண்டு உலகெங்கிலும் இருந்து 1000க்கும் மேற்பட்ட ரன்னர்கள் பங்கேற்றனர். அவர்களிடமிருந்து நிறைய நேர்மறையான கருத்துக்கள் வந்தன. இனி வருங்காலங்கள் சாதகமாக அமைந்து. நாம் பழைய நிலைக்கு திரும்புவோம் என்று எதிர்பார்த்து காத்திருந்தாலும் இப்போது மற்றொரு உலகத்தரம் வாய்ந்த மெய்நிகர் பதிப்புடன் தொடர்வதை உறுதி செய்வோம் என்று கூறினார்.
பங்கேற்பாளர்கள் 3 கிமீ 5 கிமீ ஓட்டம்/நடை, 10 மைலர் [16.1] கிமீ, அரை மராத்தான் (21.1 கிமீ) 20 மைலர் (32.2 கிமீ) மற்றும் முழு மராத்தான். 42.2 கிமீ) இவற்றில் ஒன்றை தேர்வு செய்ய முடியும் மேலும் பங்கேற்பாளர்கள் அவர்களுக்கு விருப்பமான தேதி டிசம்பர் மாதம் எந்த நாவிலும்), தொடக்க நேரம், பாதை மற்றும் தூரத்தை தேர்வு செய்யலாம். இந்த பதிப்பில் பங்கேற்க விரும்புவோர் கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளைக்கு ரூ 99 முதல் தொடங்கி தாம் விரும்பும் தொகையை நன்கொடையாக அளிக்கலாம். ஒரு உன்னத காரணத்திற்காக இந்நிகழ்வில் பங்கேற்று பங்களிக்கும் அனைவரும் இ-சான்றிதழ் மற்றும் இ-பேட்ஜ் ஆகிரவற்றைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.”
கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷனின் நிர்வாக அறங்காவலர் டாக்டர். டி.பாலாஜி கூறுகையில்,
2020 ஆம் ஆண்டில், மெய்நிகர் நிகழ்வை நாங்கள் அறிவித்தபோது, அதற்கு ஆதரவு எப்படி இருக்கும் என்பது பற்றி எங்களுக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் அதன் முடிவு எதிர்பார்த்ததை விட மிகப்பெரியதாகும் கடந்த பதிப்பு, குறிப்பாக சமூக ஊடகங்களில் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயணத்தில் எங்களுக்கு ஒரு பெரிய தாக்கத்தைக் கொடுத்தது. இந்த ஆண்டு, மிகுந்த மகிழ்ச்சியுடனும் மணக்கத்துடனும், நாங்கள் மற்றொரு மெய்நிகர் திகழ்னை வழங்குகிறோம் ஓட்டத்தில் புதிய பங்கேற்பாளர்களுக்கு இது ஒரு வசதியான முறையாக அமைந்து, பல ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட சமூகத்தில் அவர்கள் சேரக் காரணமாகிறது.
எங்கள் சேவைகளின் நோக்கத்தை விரிவுபடுத்தி ஆதரவையும் வளங்களையும் பெற உலகம் முழுவதிலும் உள்ள ரன்னர்களை சர்க்க தாங்கள் முயற்சி செய்கிறோம் புற்றுநோய்க்கு பராமரிப்பு வழங்குவது நிதி உதவி மற்றும் அதிகமான நோயாளிகளுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆலோசனை வழங்குவதன் மூலம், வாழ்க்கைக்கு மதிப்பை சேர்க்கும் எங்கள் பணி தொடர இந்தப் பதிப்பு உதவும் என்று நம்புகிறேன் மிகச்சிறிய அடிகள் எடுத்து வைத்தாலும் கூட புற்றுநோய்க்கு எதிரான போராட்டம் தொடர வேண்டும்” என்று கூறினார்.