• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையின் முதல் ஐமேக்ஸ் (IMAX) திரையரங்கை உருவாக்க பிராட்வே நிறுவனத்துடன் ஒப்பந்தம்

December 16, 2021 தண்டோரா குழு

ஐமேக்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் பிராட்வே மெகாப்ளெக்ஸ் ஆகியவை இணைந்து, கோயம்புத்தூரில், புதிதாக திட்டமிடப்பட்ட பிராட்வே மெகாப்ளெக்ஸ் தளத்தில் புதிய ஐமேக்ஸ் தியேட்டர் உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இன்று அறிவித்துள்ளது. இந்த ஐமேக்ஸ் திரையரங்கம் 2022 ஆம் ஆண்டு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது, இந்த ஒப்பந்தம் நகரத்திற்கு முதல் ஐமேக்ஸ் தியேட்டர் கொண்டு வரும்.

புதிய திரையரங்கில் லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஐமேக்ஸ் திரை, லேசர் ப்ரொஜெக்ஷன் அமைப்பு மற்றும் ஐமேக்ஸ் திரையரங்குகளுக்கு பிரத்யேகமான பயன்படுத்தப்படும் 12-சேனல் ஒலி அமைப்பு ஆகியவை இடம்பெறும். லேசர் புரொஜெக்ஷனுடன் கூடிய ஐமேக்ஸ் திரையரங்கு மானது , தெளிவான, உயிரோட்டமான படங்கள் மற்றும் துல்லியமான ஆடியோவை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது.

புதிய ஐமேக்ஸ் திரையரங்கில் காண்பிக்கப்படும் திரைப்படங்கள் ஐமேக்ஸ் இன் தனியுரிமை டிஜிட்டல் மீடியா ரீ-மாஸ்டர் அல்லது “DMR” செயல்முறையின் மூலமாகவும் மேம்படுத்தப்படும் – குறிப்பாக ஐமேக்ஸ் திரைகளுக்குக்காக, திரைப்படத் தயாரிப்பாளர்கள் நேரடி ஒத்துழைப்புடன் படங்களை ஃப்ரேம்-பை-ஃபிரேமை ரீ-மாஸ்டர் செய்யப்படுகிறது.

“தென்னிந்தியாவின் பிராந்திய மல்டிபிளக்ஸ் நிறுவனமான பிராட்வே மெகாப்ளெக்ஸுடன் எங்கள் முதல் ஒப்பந்தத்தை கையெழுத்திடுவது நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது ஐமேக்ஸ் ஐ அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்லும் மற்றும் பெரிய நகரங்களுக்கு அப்பால் இந்தியாவில் எங்கள் தடத்தை விரிவுபடுத்தும்”. “உலகம் முழுவதும் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டதால், ஐமேக்ஸ் படங்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதும் பார்வையாளர்கள் மத்தியில் ஐமேக்ஸ் இன் புகழை அதிகரித்து செய்துள்ளது. என்று ஐமேக்ஸ் தலைமை விற்பனை அதிகாரி, ஜியோவானி டோல்சி கூறினார்.

“பல ஆண்டுகளாக, பிராட்வே சமூகப் பொறுப்புணர்வுடன் வாடிக்கையாளர்களை மகிழ்விப்பது வருகிறது. பார்வையாளர்களுக்கு எல்லா வகையிலும் சிறந்த அனுபவங்களை வழங்கும் உறுதியுடன் பணியாற்றி வந்துள்ளார். ஐமேக்ஸ் உடனான எங்கள் கூட்டாண்மை, சிறந்த தொழில்நுட்பத்துடன் மேம்பட்ட பொழுதுபோக்கை வழங்கும் எங்கள் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப அமைந்துள்ளது, மேலும் இதன் மூலம் கோயம்புத்தூரில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த அனுபவத்தை வழங்க முடியும் என்று நம்புகிறோம். வரவிருக்கும் ஆண்டுகளில் ஐமேக்ஸ் குழுவினருடன் இணைந்து மேலும் பல திரையரங்குகளில் உருவாக்க திட்டமிட்டுள்ளோம்,” என்று பிராட்வே மெகாப்ளெக்ஸ் கூறினார்.

ஐமேக்ஸ் திரையரங்குகளுக்கு உரித்தான பிரத்யேக ஆப்டிகல் இன்ஜின், சிறப்பு லென்ஸ்களை கொண்டு 4K லேசர் ப்ரொஜெக்ஷன் மூலம் பிரகாசமான படங்களை விரிவாக திரை அனுபவத்தை வாடிக்கையாளர்கள் பெறமுடியும்.

ஐமேக்ஸ், பொழுதுபோக்கு தொழில்நுட்பத்தில் ஒரு பிரத்யேக கண்டுபிடிப்பு, தனியுரிமை மென்பொருள், கட்டிடக்கலை மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களை ஒருங்கிணைத்து, உங்கள் இருக்கையின் விளிம்புக்கு அப்பால் நீங்கள் நினைத்துப் பார்க்காத உலகத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும் அனுபவங்களை இது உருவாக்குகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர்கள் மற்றும் ஸ்டுடியோக்கள் தங்கள் படங்களை பார்வையாளர்களுடன் அசாதாரணமான வழிகளில் இணைக்க ஐமேக்ஸ் திரையரங்கில் பயன்படுத்துகின்றனர்.

ஐமேக்ஸ் கார்பரேஷன் பற்றி:
ஐமேக்ஸ் இன் தலைமையகம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ளது, லண்டன், டப்ளின், டோக்கியோ மற்றும் ஷாங்காய் ஆகிய இடங்களில் கூடுதல் அலுவலகங்களைக் இயங்குகிறது. செப்டம்பர் 30, 2021 நிலவரப்படி, 85 நாடுகளில் 1,664 ஐமேக்ஸ் தியேட்டர்கள் இயங்குகின்றன.

மேலும் படிக்க