September 4, 2017 தண்டோரா குழு
அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவகம் முன்பு சமத்துவ கழகத்தினர் மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அரியலூர் மாணவி அனிதா தற்கொலையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் ஆர்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சமத்துவ கழகத்தை சேர்ந்த ராஜன் என்பவர் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் ராஜனை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பேசிய ராஜன்,
மத்திய மாநில அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வானது ஏழை எளிய மக்களின் படிப்பிற்கும் வாழ்வாதரத்தை செயல்படுத்த முடியாமல் இருக்கிறது. இதனால் ஏழை மாணவி அனிதா அதிக மதிப்பெண் எடுத்தும், மருத்துவ படிப்புக்கான சீட்டு கிடைக்காததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். மாணவி அனிதாவை போல் யாரும் தற்கொலை செய்து கொள்ளாமல் இருக்க மத்திய மாநில அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் தமிழகம் இதே போல் மொட்டையாக தான் இருக்கும் என தனது அதங்கத்தை வெளிபடுத்தினார்.