• Download mobile app
22 Nov 2024, FridayEdition - 3208
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இந்தியாவின் மிகப்பெரிய கிரில்டு பர்கர் செயின் ”பிக்கீஸ் பர்கர்” புதிய விற்பனை நிலையத்தைத் தொடங்கியுள்ளது

September 29, 2024 தண்டோரா குழு

கோவை ஒண்டிப்புதூரில் இந்தியாவின் மிகப்பெரிய கிரில்டு பர்கர் செயின் ” பிக்கீஸ் பர்கர் ”புதிய விற்பனை நிலையத்தைத் தொடங்கியுள்ளது.

வாடிக்கையாளர்கள் ரூ.49க்கு ஒரு வெஜ் பர்கரையும், ரூ.85க்கு க்ரில்டு சிக்கன் பர்கரை வாங்க முடியும்.பிக்கீஸ் பர்கர் நாட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும் கிரில் பர்கர் செயின் ஆகும்.

பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட பீமர் ஃபுட் & பெவரேஜஸ் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த பர்கர் நிறுவனம் வலுவான கூட்டாண்மையுடன் நாடு முழுவதும் 150+ விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது. 2011 இல் தொடங்கப்பட்ட இந்த பிராண்ட் இந்தியா முழுவதும் உள்ள பர்கர் பிரியர்களால் பிரபலமடைந்தது.

பிக்கீஸ் பர்கர் தமிழ்நாட்டில் மட்டும் 21 கிளைகளை கொண்டுள்ளது மற்றும் கோவையில் பீளமேடு, சரவணம்பட்டி, சாய்பாபா காலனி, புரூக்ஃபீல்ட்ஸ் மால் மற்றும் தற்போது 5வது கிளையை திருச்சி ரோடு, ஒண்டிப்புதூர் செயின்ட் ஜோசப் பள்ளி அருகில் தொடங்கப்பட்டுள்ளது.

புதிய கிளையை ஸ்ரீ ரங்கநாதர் வால்வ்ஸின் தொழில்நுட்ப இயக்குநர் இளங்கோவன் அவர்கள் பிக்கீஸ் பர்கர் – ஒண்டிப்புதூர் அவுட்லெட்டின் பிரான்சசிஸ் உரிமையாளர் சுதர்ஷன் , பிக்கீஸ் பர்கரின் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியின் மாஸ்டர் பிரான்சசிஸ் மிதுன் & அருண்,மற்றும் பீமரைச் சேர்ந்த சமித் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

புதிதாக ஒண்டிப்புதூரில் தொடங்கப்பட்டுள்ள விற்பனை நிலையத்தில் 70 க்கும் மேற்பட்ட நான் வெஜ் பர்கர் வகைகள் கிடைக்கும் . சைவ பிரியர்களுக்கு 20க்கும் மேற்பட்ட வெஜ் பர்கர்கள் வகைகள் கிடைக்கும் .
பர்கர்கள் தவிர, அதில் ரேப்கள், க்ரிங்கிள் ஃப்ரைஸ், சிக்கன் விங்ஸ் , குக்கீ ஷேக்ஸ், மோஜிடோஸ், மீல் பாக்ஸ் மற்றும் டெசர்ட்கள் உள்ளன.

பிக்கீஸ் பர்கரின் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியின் மாஸ்டர் பிரான்சசிஸ் மிதுன் & அருண் பேசுகையில்,

எங்கள் பர்கர்களின் தனித்துவமான சுவையில் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்தனர்.எங்கள் பர்கர்களில் இந்திய மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துகிறோம்,எங்கள் தனித்துவமான கிரில்டு பர்கர்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்,” என்று தெரிவித்தனர்.

ஒண்டிப்புதூரில் உள்ள கிளையில் சுமார் 36-38 வாடிக்கையாளர்கள் உணவருந்தலாம். இரண்டு நபர்கள் ரூ.300 லிருந்து ரூ. 400 -க்கு இங்கு சாப்பிடலாம்.வாடிக்கையாளர்கள் தங்களுடைய கிரில்டு பர்கர்கள் மற்றும் ஹாலோவீன் ஷேக்கை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்றார்.

திறப்பு விழா சலுகையாக,முதல் 10-15 நாட்களுக்கு ஒரு பர்கர் வாங்கினால் 1 பர்கர் இலவசம்.

மேலும் படிக்க