April 26, 2025
தண்டோரா குழு
ரோட்டராக்ட் மாவட்ட அமைப்பு (ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3201), அனைத்து ரோட்டரி கிளைகள் மற்றும் ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி இணைந்து கோவையில் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்காக 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்ற STAND FOR HER என்ற வடிவிலான மனிதசங்கிலி நிகழ்வை நடத்தினர்.
பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி கோவையில் உள்ள போலீஸ் நிலையங்களின் தொலைபேசி எண்கள் அடங்கிய செயலியும் (APP) அறிமுகம் செய்யப்பட்டது. பெண்களின் பாதுகாப்பை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் உறுதி செய்வோம்! பெண்களின் பாதுகாப்பில் சமூகத்தின் அத்தனை மக்களும் எப்போதும் துணை நிற்போம்! என்பன போன்ற விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து பிரமாண்ட பதாகையில் 3 ஆயிரம் பேர் எடுத்து கையெழுத்திட்டனர்.
நிகழ்வு இன்று காலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை நடந்த இந்நிகழ்வு இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் பதிவு செய்வதற்காக நடந்தது. இந்த சாதனை நிகழ்வில் கல்லூரி மாணவ, மாணவியர்கள்,ரோட்டாரக்டர்கள், ரோட்டாரியர்கள், தொழில்முனைவோர் மற்றும் வணிகர்கள் என 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
இன்நிகழ்ச்சியியை பதிவு செய்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.விழாவில் மாவட்ட ரோக்ராக்ட் பிரதிநிதி தங்கபாண்டியன்,மாவட்டத் தலைவர்கள் கார்த்தி மற்றும் சுபாஷ், IPDRR சதீஷ், DRR தேர்வு, கோகுல், DRR நாமினி, விஜய் மற்றும் அனைத்து கவுன்சில் நம்பர்கள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு p ரொட்டேரியன் எம்டி. மாருதி, மாவட்ட ரோடராக்ட் தலைவர் ரொட்டேரியன் எம்டி பெட்ரிக்ஸ் ஜான், மாவட்டத் தலைவர் (இளைஞர் சேவை) ரொட்டேரியன் எம்டி. காட்வின் மரியா விசுவாசம், மாவட்டத் தலைவர் மக்கள் தொடர்பு பட்டியல் எம்டி வரதராஜன், ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் சிட்டி தலைவர் ரொட்டேரியன் ரவிக்குமார், சக்தி பொறியியல் கல்லூரியில் தலைவர் டாக்டர் எஸ் தங்கவேலு மற்றும் முதல்வர் டாக்டர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.