December 15, 2021 தண்டோரா குழு
கோவையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான கால்கோள் விழா,கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
கோவையில் கடந்த, 2018ம் ஆண்டு முதல், கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜல்லிக்கட்டு சங்கம் இணைந்து நடத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி, செட்டிபாளையத்தில், ஜனவரி 9 ஆம் தேதி நடத்த அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் பைபாஸ் சாலையில், ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடத்தில் கால் கோள் நடும் விழா கோவை தி.மு.க. கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி தலைமையில் நடைபெற்றது.பூஜை துவக்க விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடம் சுத்தம் செய்யப்பட்டு,ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற துவங்கியது.தொடர்ந்து பகுதி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் இணைந்து ஆலோசணையில் ஈடுபட்டனர்.
முன்னதாக நடைபெற்ற துவக்க பூஜை விழாவில், மதுக்கரை ஒன்றிய துணை பெருந்தலைவர் எம்.ஆர்.ஆர் பிரகாஷ்,ஒன்றிய கழக செயலாளர் ராஜசேகர்,மாவட்ட கவுன்சிலர் ராஜன்,மதுக்கரை ஒன்றிய நிர்வாகி இ.பி.ராஜேந்திரன், மற்றும், பேரூர் கழக செயலாளர்கள் ரங்கசாமி , மதுக்கரை ராம்ஜி,பாலகிருஷ்ணன்,சாலம் பாஷா ,மாசிலா மணி,மணிகுட்டி,முத்து மாணிக்கம் , இளைஞரணி ஜெகதீஸ்வரன், கபிலன், சண்முகம், செல்வராஜ், தண்டபாணி , சுதாகர்உட்படசார்பு அணி அமைப்பாளர்கள் , மகளிர் அணியினர் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர் .